|
விபச்சாரம் ஓர் உலகப்பார்வை
முகவை ரபீக்
விபச்சாரம்’
என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள்
பலவகையாகும். பொதுவாக இப்பொழுது “பொருள்
வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு
ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்’
என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக்
கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன்
கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின்
செய்கையையும் “விபச்சாரம்’
என்றே கூறலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எகிப்து, இந்தியா,
பாபிலோனியா,
கிறீஸ் ஆகிய நாடுகளில் விபச்சாரம் ஒரு தொழிலாக அங்கீகாரம்
பெற்று விட்டது. மெஸபடோமியாவில் கி.மு.2300 இல் விலைமாதுக்கள்
சுறுசுறுப்பாக தொழிலில் ஈடுபட்டதாகவும் குறிப்புகள் உண்டு. ஏதென்ஸ்
நாட்டில் சட்டமேதை ஸோலன்,
சிவப்புவிளக்குப் பகுதிகள் இயங்குவதற்குச் சட்டத்தில்
வழிவகுத்தார். 18ம் நூற்றாண்டில்தான் இங்கிலாந்தில் விபச்சாரம்
வெளிப்படையாகத் தலையெடுத்தது. அங்கு இராணுவத்துக்கும்,
பங்கு மார்க்கெட்காரர்களுக்கும் அவர்கள் பிரத்தியோகமாக
விலைமாதர்களை நியமித்தார்கள். அந்த விலைமாதர்களிடம் மற்றவர்கள்
போகமுடியாது. பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில்
‘விபச்சார’மும்
ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்’
என்னும் கொடிய வழக்கம்,
இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும்,
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில்
நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம். இன்றும் பம்பாய்,
கொல்கத்தா,
ஹைத்ராபாத் போன்ற பல நகரங்களில் தெரிந்தே விபச்சாரம்
நடக்கிறது.
ஆடு மாடுகளைப் போல் பெண்களை விற்பனை செய்யும் இழிநிலை வட மாநிலங்கள்
சிலவற்றில் நிலவி வருகின்றன. ராஜஸ்தான் மத்திய பிரதேசம் மற்றும்
குஜராத்தில் இந்த கொடுமையான செயல் நடைமுறையில் இருக்கிறது. இந்த கொடூர முறை
நந்தா பிராட்டா என்று அழைக்கப் படுகிறது. மனைவியிடம் இல்லற வாழ்வில்
திருப்தி அடையாத ஆண்கள் பெண்களை விற்பனை செய்யும் தரகர்களை அணுகி
தங்களுக்கு தேவையான பெண்களை விலைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். அவள்
கசந்து போனதும் மீண்டும் அவளை தரகரிடம் விற்றுவிட்டு வேறு பெண்ணை வாங்கிக்
கொள்கிறார்கள்.சந்தாபாய் என்ற பெண்ணை அவளது கணவன் விற்பனை செய்து விட்டு
வேறொரு பெண்ணை விலைக்கு வாங்க விரும்பினான். தான் விற்பனைப் பொருளாக
கருதப்படுவதை சாந்தாபாய் வன்மையாக கண்டித்தாள் உடன்பட மறுத்தாள். தன்
விருப்பத்துக்கு கட்டுப்படாத மனைவியை சூனியக்காரி என்று கணவன் கூறி ஊர்
முழுவதும் செய்தியை பரப்பினான். இந்த செய்தி காட்டுத் தீப்போல் பரவி
கடைசியில் சாந்தா பாயின் உயிரையும் குடித்தது. கிராமத்தின் கிணற்றில் அவள்
பிணம் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்துக கொண்டால் என்று வழக்கு
முடிக்கப் பட்டு விட்டது.
இன்றைய உலகம்
நாகரீகம் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் சமம் என்ற போலிச் சித்தாந்தத்தால்
அநாகரீகத்தின் உச்சிக்கே சென்று விட்டது. இவை எப்படிப்பட்ட மோசமான
விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை சில கணக்கெடுப்புகள் தெளிவாக
விவரிக்கின்றது.
ஆந்திரமாநிலத்தில் சுமார் 16000
தேவதாசிகள்
இருக்கிறார்கள்
என்றும், கர்நாடகாவில்
சுமார் 22000 தேவதாசிகள்
இருக்கிறார்கள் என்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"World Health Organisation"
என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில்
விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15
சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால்
விபச்சாரத்தில் கொண்டுவரப்பட்ட பெண்களார். கர்நாடக மாநிலம் - ஆந்திர
மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில்
70 சதம் முதல்
80 சதம் வரை இந்த தேவதாசிகளே
ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது.
2000
ஆண்டில்
20
லட்சம் விபச்சாரிகள்
இந்தியாவில் இருப்பதாக ஐ.நா அமைப்பு கூறியுள்ளது. அதே ஆண்டு
14
ஆயிரம் பெண்கள்
இந்தியாவில் கற்பழிக்கப் பட்டுள்ளதாக நாடாள மன்றத்தில் அறிவித்துள்ளனர்.
உலக மக்கள் அனைவரும் வியாபார நிமித்தமாக இந்தியாவரும் வேளை உலக
வியாதிகளையும் இங்கு கொண்டுவந்து கொடுத்து விட்டுப்போகிறார்கள். இன்று
இந்தியாவில் 3. 5
கோடி மக்கள்
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று
கணக்கிடப்பட்டிருக்கிறது. செக்ஸ் தொழிலாளர்கள் நடத்தும் வங்கியின் சாதனை
மே 05, 2007
கொல்கத்தாவில்
விபச்சாரப் பெண்களால் நடத்தப்படும் ஒரு வங்கி ரூ.
9
கோடி அளவுக்கு
முதலீடுகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்த வங்கியை முழுக்க
முழுக்க விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களே தொடங்கி நிர்வகித்து
வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின்
5
மாவட்டங்களில்
8500
உறுப்பினர்கள்
இதில் சேர்ந்துள்ளனர். இதன் முதலீடு ரூ.
9
கோடியைத் தொட்டு சாதனை
படைத்துள்ளது. தொழிலாளர்களின் ஆட்சி என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள்
ஆளும் மேற்கு வங்கத்தில்தான் இந்தக் கொடுமை நடக்கிறது!
சில மாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் ஞாநி அவர்கள் ஒரு விலைமகளிரிடம்
கேட்ட கேள்வி "இந்த விபச்சாரம் இழிவாக தோன்றவில்லையா?".
அதற்கு அந்த பெண் "அனைவரும் எதாவது ஒரு உடலுறுப்பை
பயன்படுத்தித்தான் சம்பாதிக்கிறார்கள். நாங்களும் மற்றவர் கண்களுக்கு
தெரியாத சில உறுப்புகளை பயன்படுத்தி சம்பாதிக்கிறோம்" என்றாராம்.
பாலியல் சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் கண்டவனுக்கும் முந்தானை
விரிக்கும் விபச்சாரிகளின் செயலை உழைப்பு என குறிப்பிடுவது சரியா?
காடு-கழனிகளில் அரைவயிற்றுடன் ஒருநாளின் மூன்றில் இரண்டு பங்கு கால்கடுக்க,
உடல்நோக
உழைக்கும் விவசாயினுடைய உழைப்பும் இதுவும் ஒன்றா?
விபச்சாரத்தில் ஈட்டும் பணத்தை சேமிக்க வேண்டுமாம்! நாடு உருப்படுமா?
அதேபோல்
'குடிமகன்'களுக்கும்
வங்கி லோன் வழங்கி அரசே உதவலாமே! வங்கி வழங்கும் கடன்தொகையால் ஆணுறையை
போதுமான அளவுக்கு இருப்பு வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த கடனை அவலமான
இந்த தொழிலிலிருந்து வெளிப்பட்டு வேறு தொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு
கொடுக்கலாமே! இத்தகைய அவலங்களைக் கண்டுகொள்ளாமல் போனால் வெகுசீக்கிரம்
அன்னை பாரதம் என்று அறியப்படும் நம்நாடு வேறு பெயரில் அறியப்படும் அபாயம்
இருக்கிறது.
புள்ளி விபரம்:
ஆணும் பெண்ணும் சமம் என்ற
வறட்டுச் சித்தாந்தத்தால் யாரும் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய
அவசியமில்லை என்ற அடிப்படையில் யாரும் யாருடனும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற
ரீதியில் செயல்பட்டு வருகின்றனர். திருமணம் செய்தால் ஒருவருக்கு
கட்டுப்பட்டு வாழ நேரிடும் என்ற எண்ணமே இந்தச் சீரழிவிற்குக் காரணமாகும்.
1999
ஆம் ஆண்டில் மட்டும் 43818
விவாகரத்துகள் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக
1
லட்சத்து 46
ஆயிரத்து 914
குழந்தைகள் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவருடன் மட்டும் வாழ வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளது. விவாகரத்தின் காரணமாக விவாகரத்து பெற்றவர்களின் குழந்தைகள்
உடல் ரீதியாகவும்
மனரீதியாகவும் பல
மோசமான விளைவுகளை சந்திப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாய ரீதியாகவும் பல
இன்னல்களை சந்திக்கின்றனர். இதனால் ஒழுக்கமுள்ள கட்டுப்பாடுள்ள எதிர்காலச்
சமுதாயம் உருவாவது பாதிக்கப்பட்டுள்ளது. தாய் தந்தை அரவணைப்பில் வாழும்
குழந்தைகளே எதிர்காலத்தில் சிறந்த சமுதாயத்தவர்களாக உருவாக முடியும்! என்று
பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. தேசிய புள்ளியியல் அலுவலகம்
வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி இங்கிலாந்தில் திருமணம் செய்து கொள்ளும்
ஆயிரம் பேரில் 130
பேர் விவாகரத்து செய்கின்றனர்.
1999
ஆம் ஆண்டின்படி இது 12.70
சதவீதமாகும். அமெரிக்கப் பொருளாதார அறிஞர்கள் இருவர்
‘சுவைஞர்களும்’
கவனத்தில்
கொள்ளத்தக்க ஒர் ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்க இளசுகளின் பாலியல் நடத்தைகளே அவர்களது ஆய்வின் மையம். மது
அருந்திவிட்டு காரோட்டுவது போலவோ அல்லது மது அருந்திவிட்டு பேசிக்
கொண்டிருப்பது போலவோ அல்ல –
மது அருந்தி விட்டு
உடலுறவில் ஈடுபடுவது. அதனால் பள்ளி
கல்லூரிப்
பருவத்திலேயே மாணவிகள் தாய்மார்களாகி விடுகிறார்கள். பல சமயங்களில் கொடிய
பால்வினை நோய்க்கு ஆளாக நேரிடுகிறது என்று எச்சரிக்கிறார்கள் அந்த
ஆய்வறிஞர்கள்.
கைஸர் பேமிலி பௌன்டேஷன்
என்ற அமைப்பு 13
முதல்
24
வயதுக்குள் பட்ட அமெரிக்க
இளசுகளிடையே ஓர் ஆய்வு நடத்தியது. ‘போதை
மருந்து மற்றும் மதுபழக்கத்தால் உந்தப் பட்டு நாங்கள் உடலுறவிலும்
ஈடுபட்டோம்’
என்று ஆய்வுக்கு
எடுத்துக் கொள்ளப்பட்டவர்களில்
81
சதவிகித இளசுகள்
பகிரங்கமாக ஒப்புக் கொண்எருக்கிறார்கள். அமெரிக்காவில் கூட உடலுறவுகளால்
பாதிக்கப்பட்டுத் தவிக்கும் டீன் ஏஜ் கர்ப்பவதிகள் எத்தனை பேர் தெரியுமா?
10 லட்சம்.
ஆண்டுதோறும்.
பாடாம் தீவு
இந்தோனீசியாவிற்குச் சொந்தமானது. சிங்கப்பூரிலிருந்து அரை மணியில் படகில்
சென்று விடலாம். இங்கு வரும் சுற்றுப்பயணிகளில் 80% சிங்கப்பூரர்கள்.
படாமின் மிக மலிவான பொழுதுபோக்குகளும் விபச்சாரமும் நைட் கிளப் பிசின ஸும்
சிங்கப்பூரர்களுக்குக் கவர்ச்சிகரமானது. இங்கு புள்ளி விவரப்படி 9000
இந்தோனீசியப் பெண்கள் அதாவது பாலியல் தொழிலாளிகள் உள்ளனர். ஆனால் உண்மையில்
20000 பேர் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இவர்களில் 30% பெண்கள் 14-
16 வயதானவர்கள். சிலர் பருவமடையாத பெண்கள். சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட
3000 பேர் கேளிக்கைக்காக இங்கு மாதந்தோறும் செல்கின்றனர். இப்பெண்கள்
குறிப்பாக
சிறுமிகள் விபச்சாரத்தொழிலில் அதிக விலைப் போகின்றனர். சில விவரம் தெரிந்த
பெண்கள் உணவகங்கள்
பார்களில்
வேலைபார்க்க அழைத்து வரப்பட்டு பின் ஏமாற்றப்பட்டு விபச்சாரத்தில்
ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் ஆசிய நாடுகளில் பாலியல் தொழில் இன்று
பெரும் வருவாய் ஈட்டும் தொழிலாக இருக்கிறது என்பது உண்மை. குறிப்பாக,
தாய்லாந்தும்,
இந்தோனீசியாவும்,
சீனாவும் "Sex
Sector"
என்பதை தனி
பொருளியலாக ஆக்கிக் கொண்டது ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.
ஒரு மாணவியின் அறிக்கை:
பம்பாய் மாநகரம்!
அதிலிருக்கும் புகழ்மிக்க கல்லூரி
பம்பாய்
தேசியக் கல்லூரி. இதில் சபாநடவார் என்றnhரு
மாணவி. முனதைப் பற்றிப் படிக்கம் பாடத்தைப் படிப்பவர். பட்டப்படிப்பை
முடித்து விட்டார். முதுநிலை பட்டப் படிப்பு மாணவியானார். அந்த முதநிலை
பட்டப் படிப்பின் இறுதியில் ஏதேனும் ஒரு தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி அவர்
அறிக்கை தர வேண்டும். இந்த மாணவி ஆய்வுக்காக எடுத்துக் கொண்டது
தன்னோடு
படிக்கம் சக மாணவிகளின் நடவடிக்கைகள்.
கள ஆய்வில் அவர்
எடுத்து கொண்டவை அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்திற்று. அவர் தன்னோடு பயின்ற சக
மாணவிகள் பலர் பணத்திற்காக தங்கள் இளமையை விற்பனை செய்கின்றார்கள் என்பதை
அறிந்தார். இது ஏன்?
என
ஆராய்ந்தார். அப்போது தான் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்த
மாணவிகள் மட்டுமல்லாமல் பல குடும்பப் பெண்களும் இதே போல் அமங்கலமான
நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்ற செய்தி தெரிய வந்தது. இந்தப் பெண்கள்
படித்தவர்கள்
அறிவுடையவர்கள்.
அதிர்ந்தார் ஆராய்ச்சி மாணவி சபாநட்வார். ஆனாலும் தொடர்ந்து தன்
ஆராய்ச்சியை நடத்திய அவர்
இப்படிச்
சொன்னார்: திருமணமான பெண்கள் தங்கள் உடலை விற்பனை செய்கின்றார்கள் என்பதை
அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இது பணத்திற்காகவும்
தங்கள்
சுகத்திற்காகவுமே. உண்மையைச் சொல்வதானால் சில கணவன்களே தங்கள் மனைவியை
இப்படிச் செய்யச் சொல்லி இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் நல்ல வசதியோடு
வாழ்பவர்கள் மேல்மட்டத்துக் குடும்பப் பெண்கள். இதில் ஈடுபடும் கல்லூரி
மாணவிகள் பேரும் புகழுமிக்க கல்லூரிகளில் படிப்பவர்கள். பெரிய இடத்துப்
பெண்கள். நான் எடுத்துக் கொண்ட இடங்கள் லோகண்ட் வாலா,
ஜுஹூ,
நரிமண்
பாய்ண்ட்,
பீச்கேண்டி போன்ற
மேட்டுக்குடி மக்கள் வாழும் பகுதிகள் தாம்.(
Savvy Aug, 2001).
எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி
நோய்கள் தங்களுக்கு வந்து விடும் என அஞ்சுகின்றார்களா என்றொரு கேள்வி.
இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் வந்திருக்கின்றது. நாங்கள்
நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்போதைய சுகம் தான்
முக்கியம். எதிர் வரும் நாள்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இப்போது
நாங்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பதிலால்
அதிர்ந்து போனார் சபா நட்வார். அவர் தன் ஆராய்ச்சியைத் இப்படி
வெளிப்படுத்துகின்றார்.
திருமணமான பெண்கள் இதில் ஈடுபடுவது என்னை அதிர்ச்சியில்
ஆழ்த்திற்று. அவர்களுக்குக் குழந்தைகள் இருக்கின்றன ஆனால் அவர்கள் எதைப்
பற்றியும் கவலைப்படவில்லை. அவர்கள் வீட்டிலேயே இது நடைபெறுகின்றது.
அகில
இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (All
India Institute of Medical Science)
என்றொரு நிறுவனம் நமது தலைநகர் டெல்லியில் இயங்கி வருகின்றது. இந்த
ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆய்வை இந்த மாணவியிடமிருந்து ஏற்றுக் கொண்டுள்ளது.
பாராட்டி பதக்கமும் வழங்கியிருக்கின்றது. இப்படி எல்லோரையும் அதிர வைத்த
இந்த ஆய்வு பல உண்மைகளைப் பட்டவர்த்தனமாக வெளிக்காட்டியிருக்கின்றது.
உண்மையைச் சொன்னால் இந்தப் பெண்களுக்கு ஏன் வாழ்கின்றோம் என்ற வினாவுக்கு
விடை கிடைக்கவில்லை. அதனால் எதிர்வரும் நாட்களைப் பற்றி எந்தக்
கவலையுமில்லை. இந்த உலகில் இப்போது சுகமாக இருக்க வேண்டும் என்பதே
இலட்சியம்!
இவர்களுக்கு மட்டுமல்ல
பெரும்பாலான மனிதர்களுக்கு ஏன் வாழ்கின்றோம்
இந்த
வாழ்க்ககையின் முடிவென்ன என்ற கேள்விகளுக்க விடை தெரியவில்லை. இதனால் தான்
எப்படி வாழ வேண்டும் எனத் தெரியாமல் தங்களை அழிக்கும் கொடிய வழிமுறை ஒன்றை
எந்தச் சலனமுமில்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படி மனிதன் தறிகெட்டு
நெறிகெட்டு தன்னைத் தானே அழித்துக் கொள்பவன் என்பதனால் தான் மனிதனைப்
படைத்த இறைவன் அவன் இந்த உலகில் ஏன் வாழ்கின்றான்
அவன் இந்த
உலகில் எப்படி வாழ வேண்டும்
வாழ்வின்
முடிவு
மறுமை என்ற இறப்பிற்குப்
பின்னால் வரும் வாழ்க்கை இவற்றைப் பற்றி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி
இருக்கின்றான்
சமூக அவலங்களில் சில:
இன்று தமிழகத்தில்
விபச்சாரம் செய்பவர்களை காவல்துறை பிடிப்பது தினமும் என்று ஆகிவிட்டது.
இப்படி நடக்கும் அவலங்களில் சிலவற்றை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்.
சென்னை:ஆயுர்வேத
மசாஜ் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த கேரளாவைச்
சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அண்ணா நகர்
சாந்தி காலனியில் நரம்பியல் வர்மா வைத்திய நிலையம் என்ற பெயரில் கிளினிக்
ஆரம்பித்தார் வாமணன். அங்கு நரம்பியல் சிகிச்சை மற்றும் மசாஜ் மையத்தையும்
அவர் நடத்தி வந்தார்.மசாஜ் செய்து கொள்வதற்காக வந்த ஆண்களைக் கவருவதற்காக
பெண்களை மசாஜ் செய்ய பணியில் அமர்த்தினார். பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ள
கூடுதல் கட்டணம் வசூலித்தார்.பெண்களிடம் மசாஜ் செய்து கொள்ள ஏராளமான ஆண்கள்
வர ஆரம்பித்த நிலையில் தனது கிளினிக்கிலேயே 3
தனித்தனி படுக்கை அறைகளை ரெடி செய்தார். அங்கு வைத்து விபச்சாரத் தொழிலை
ஆரம்பித்தார்.இந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து மசாஜ்
செய்து கொள்ள வந்தவர்கள் போல சாதாரண உடையில் போலீஸார் அங்கு சென்றனர்.
அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியாகத் தெரிய வந்தது.இதையடுத்து
வாமணன், மசாஜ் செய்யும் பணியிலும்,
விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப்பட்ட பானுப்பிரியா,
கற்பகம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும்,
புரோக்கர்கள் மனோகரன், சசிக்குமார்
ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். (தினத்தந்தி)
மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து
விபச்சாரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ள பல் மருத்துவ மாணவியை போலீஸார்
கைது செய்தனர். அவரோடு துணை நடிகை ஒருவரும் விபச்சாரம் செய்தபோது கையும்
களவுமாக பிடிபட்டார். சென்னையில் விபச்சாரத் தடுப்புப் போலீஸார் திடீரென
அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.விருகம்பாக்கம் கம்பர் தெருவில் உள்ள
ஒரு அபார்ட்மென்ட்டில் விபச்சாரம் மற்றும் ஆபாசப் படம் பிடிப்பதாக
போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படை அங்கு
விரைந்தது.குறிப்பிட்ட வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியபோது அங்கு சுனிதா
மற்றும் சாந்தி ஆகிய இரு பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய
வந்தது. இவர்களில் சுனிதா பெங்களூரைச் சேர்ந்தவர். கர்நாடக மாநிலம்
மணிப்பாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து
வருகிறார். தற்போது ஹவுஸ் சர்ஜனாக உள்ள அவர் மாதம் ஒருமுறை சென்னைக்கு
வந்து விபச்சாரத்தில் ஈடுபடுவாராம். பின்னர் மணிப்பால் சென்று விடுவாராம்.
ஆடம்பரமாக செலவழிக்க பணம் தேவைப்பட்டதால் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக
போலீஸாரிடம் சுனிதா தெரிவித்தார்.தற்போது போலீஸில் பிடிபட்டு விட்டதால்,
இனிமேல் விபச்சாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று
கண்ணீர் மல்க போலீஸாரிடம் தெரிவித்தார் சுனிதா. போலீஸாரிடம் சுனிதா
பிடிபட்டபோது அவருடன் மயிலாப்பூரைச் சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உல்லாசமாக
இருந்தார். அவர் ஒரு தொழிலதிபராம். சுனிதாவிடம் சந்தோஷமாக இருப்பதற்காக
5,000 ரூபாய் பணம்
கொடுத்திருந்தாராம் ரங்கராஜன்.சுனிதாவுடன் இருந்த பெண்ணான சாந்தி துணை
நடிகை ஆவார். இவருக்கு கல்யாணமாகி 2
குழந்தைகளும் உள்ளனர். சினிமாவில் சரியான சம்பளம்
கிடைக்காததால் சைடில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக
தெரிவித்தார்.கணவருக்கு தான் செய்யும் விபச்சாரத் தொழில் தெரியாது என்றும்
தயவு செய்து சொல்லி விடாதீர்கள் என்றும் அவர் போலீஸாரிடம் கெஞ்சினார்.
இவர்தான் சுனிதாவுக்கு பார்ட்டிகளைப் பிடித்துக் கொடுப்பாராம்.இவர்கள்
இருவரையும் ஏற்பாடு செய்த பெண் புரோக்கர் ராதாவையும் போலீஸார் கைது
செய்தனர். விபச்சாரம் நடந்த இடத்தில் ஏராளமான சினிமா புள்ளிகள் வசிப்பது
குறிப்பிடத்தக்கது.விருகம்பாக்கத்தில் உள்ள பல பங்களாக்கள்,
அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் விபச்சாரம் கொடி
கட்டிப் பறப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இப்பகுதியில் தொடர்ந்து
விபச்சார வேட்டை நடைபெறும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
(தினமலர்)
சினிமாவின் தாக்கம்:
இன்று இந்தியாவில்
விபச்சாரம் பெருகுவதற்கு சினிமாவே அடிப்படை காரணமாக உள்ளது. இன்றைய மனித
சமுதாயத்தை குறிப்பாக இளைஞர்களை சீரழித்துக் கொண்டிருப்பதில் சினிமா
எவ்வளவு பெரிய பங்கு வகிக்கின்றது என்பது நாடறிந்த உண்மை. காசுக்காக வேஷம்
போடுகின்ற ஒரு கலைதான் சினிமா. அதில் எல்லாமே போலியானது எதார்தத்திற்கு
நேர்மாற்றமானது. ஒரு படத்தில் ஒரு நபருக்குத் தாயாக நடிக்கும் ஒரு பெண்
இன்னொரு படத்தில் மனைவியாகவும் வேறு ஒரு படத்தில் தங்கையாகவும் நடிக்கின்ற
காட்சிகளைத்தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது. ஆபாசக் காட்சிகள் இல்லாத
படம் எடுபடாது என்று கூறுமளவிற்கு எல்லாப் படங்களிலும் ஆபாசம்
தலவிரித்தாடுகிறது. முத்தக் காட்சிகள் கற்பழிப்புக் காட்சிகள் சினிமாவில்
தலைவிரித்தாடுகின்றன. கணவன் மனைவி தனி அறையில் செய்ய வேண்டியவற்றை
லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசிக்கக் காட்டுகின்ற கேவலமான நிலை இன்றைய
சினிமாக்களில் காட்டப்படுகின்றது. ஆபாசம் கூடாது என்று சொல்லும் அரசாங்கம்
சினிமாவில் ஆபாசத்தைத் திறந்து விட்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்கின்ற
இளைஞர்கள் ஏன் ஈவ்டீஸிங்கில் ஈடுபடமாட்டார்களா?
சீரழிவதற்குண்டான
எல்லா வாசல்களையும் அரசாங்கம் திறந்து விட்டு விட்டு இளைஞர்களை சீரழியும்
போது அவர்களைத் தண்டிப்பது என்பது புத்திக்குப் பொருந்தாத செயல் அல்லவா?
அடிதடி வெட்டு குத்து வன்முறைக் காட்சிகளை கற்பனையாக
சித்தரித்து சினிமாவில் காட்டி விட்டு அதன் மூலம் கோடிகளை சுருட்டி விட்டு
சுகமாக இருந்து விடுகின்றனர் தாயாரிப்பாளர்களும் நடிகர்களும்.
இன்றைக்குத்
திரைப்படங்களில் காட்டப்படும் காதல் கதைகள் யாவும் ஒரு சமூக அவலத்தை
நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்றன. நீங்கள் காதல் செய்தால் அதற்காக
தியாகங்களைச் செய்தால் இறுதியில் நீங்கள் அடையப் போவது சந்தோஷம் தான் என்ற
செய்தி இன்றைக்கு எத்தனையோ இளைஞர்களையும் இளைஞிகளையும் தங்களது வீட்டு
வாசல்படியை விட்டு வெளியேற்றி உள்ளது என்பது சிந்திக்கத்தக்கது. இவ்வாறு
காதல் வசப்பட்ட ஒரு தேசம் அடைந்திருக்கும் நிர்க்கதியான நிலை என்னவென்று
தெரியுமா?
இன்றைக்கு நாகரீகங்களின்
பிறப்பிடம் என்றழைக்கப்படும் அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் இவ்வாறு
வழிகேட்டிற்கு வழி நடத்திச் செல்லப்பட்டதன் காரணமாக அங்கு
40
லிருந்து
60
சதவீதமான திருமணங்கள்
விவாகரத்தில் முடிகின்றன. பிரிட்டனில்
3
திருணமத்தில் ஒன்று
விவாகரத்தில் முடிகின்ற மோசமான நிலைமை உருவாகி உள்ளது. கள்ளக் குழந்தைகள்
எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்த சமூகத்தில் பெருகி வருகின்றது. தாயும்
தந்தையும் இல்லாமல் தெருவில் அநாதையாக விடப்பட்ட சிறுவர்கள் சிறுமிகளினால்
இன்றைக்கு அந்த தேசங்களில் சமூகக் குற்றங்கள் தலைவிரித்தாடுகின்றன. உயர்தர
பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் கூட தாயிடமும் தந்தையிடமும் சரியான
இனக்கப்பாடு காணப்படாததால் மன இறுக்கத்திற்கு ஆளாகி தன் சக மாணவர்களையே
துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அவலமும் நடைபெற்று வருவதை அன்றாடம் செய்தித்
தாள்கள் வழியாக அறிந்து வருகின்றோம்.
இந்தி
சினிமா இறக்கை கட்டி பறக்க,
மறுபுறம்
கவர்ச்சி,
காமம்,
தவறான
உறவு இவற்றை மையப்படுத்தி பெருவாரியான படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தி
பேசும் மாநிலங்களை தாண்டி தமிழிலும் இப்படங்கள் வெளியாவது அதிர்ச்சியான
நிகழ்வு. மலையாள ஆபாசபடங்கள் வரத்து தமிழகத்தில் ஏறக்குறைய நின்றுபோன
நிலையில்,
அந்த இடத்தை
பாலிவுட்டின் பலான படங்கள் நிரப்பியுள்ளன. தமிழில் நடித்த இஷா கோபிகர்,
'ஜே ஜே'
நாயகி அமோகா
போன்ற முன்னணி நடிகைகள் இதுபோன்ற கவர்ச்சி படங்களில் நடிக்க தயங்குவதில்லை
என்பது இன்னொரு ஆச்சரியம்! பெண்ணுடன் பெண் உறவு கொள்ளும் இஷா கோபிகரின்
'கேர்ள்
பிரெண்ட்'
படம்,
இந்தியாவின்
முதல் லெஸ்பியன் படம் என்ற விளம்பரத்துடன் தமிழில் வெளியாகி பரபரப்பை
ஏற்படுத்தியது. இதேபோன்று டஜன் திரைப்படங்கள் பாலிவுட்டிலிருந்து
கோலிவுட்டுக்கு வர வரிசைகட்டி நிற்கின்றன. இவற்றின் உள்ளடக்கத்தை
இப்படங்களின் பெயர்களே நமக்கு உணர்த்தி விடுகின்றன.
'8-வது
இரவு', 'உச்சக்கட்டம்',
'சிருங்காரி',
'சேத்னாவின்
இரவுகள்'. baலருடன்
தவறான உறவு வைத்துக்கொள்வது,
கணவனுக்கு
துரோகம் இழைப்பது,
விலைமாதுவின் இரவு வாழ்க்கை,
பில்லிசூன்யம்,
நிர்வாணபூஜை...ஆகியவையே இப்படங்களின் கதை களங்கள்.
கற்பு
குறித்தும் கலாச்சாரம் குறித்தும் படங்களின் பெயர் குறித்தும் கூச்சலிடும்
அமைப்புகள் இந்த பாலிவுட் பாய்ஸனை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தைவிட
அதிர்ச்சியை அளிக்கிறது. ஒருவகையில் மலையாள காலைக்காட்சி படங்களைவிட இவை
அபாயகரமானவை. மலையாளப் படங்களை பார்க்க செல்லும் பார்வையாளர்கள்,
தவறான
ஒன்றில் ஈடுபடும் குற்றவுணர்வுடன் முடிந்த அளவு தங்களை மறைத்துக்கொண்டே
தியேட்டருக்குள் நுழைகிறார்கள். மேக்னா நாயுடு,
இஷா கோபிகர்,
சுஷ்மிதா
சென் போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருப்பதால் பாலிவுட் படங்கள்
பார்வையாளர்களுக்கு எவ்வித குற்றவுணர்வையும் ஏற்படுத்துவதில்லை. சாதாரண
பார்வையாளர்களின் மனநிலையுடனேயே இவர்கள் டிக்கெட் வாங்குகிறார்கள்.
திருட்டை அது திருட்டு எனும் குற்றவுணர்வு இல்லாமல் செய்யும் அபாயகரமான
மன
|