|
Home
அறிவுப்பூர்வமான சத்திய மார்க்கமே
இஸ்லாம்
இறைநம்பிக்கை கொண்ட விசுவாசிகள்
மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டுமாக!
அன்பின் சுதர்சன்
அவர்களுக்கு
தாங்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று துவங்கி முபாஹலா
பற்றிய ஒரு தகவலைத் தெரிவித்து அதனோடு கிருத்துவ நம்பிக்கையையும்
பொருத்தி
முபாஹலாவுக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது எனில் இஸ்லாம் எந்த வகையில்
அறிவுப்பூர்வான
மார்க்கம் என விளக்கம் கேட்டுள்ளீர்கள்.
முஸ்லீம்களாகிய நாங்கள் வணங்கத்
தகுதியான ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கமாட்டோம்,
வணங்கக்
கூடாது. இஸ்லாம் அல்லாத மற்ற மதங்களில் அவரவர் கொள்கைப்படி தாங்கள்
கடவுள் என்று
எவைகளை எல்லாம் நம்பியுள்ளார்களோ அவைகளை வணங்குவார்கள்.
மதங்களுக்கு
அப்பாற்பட்ட நீங்கள்
‘அனைவருக்கும்
வணக்கம்’
என்று உங்கள் கேள்வியைத்
துவங்கியுள்ளீர்கள். அதாவது உங்கள் கேள்வியைப் படிப்பவர்கள் அனைவரையும்
நீங்கள்
வணங்குவது போன்ற வாசகத்தை அமைத்துள்ளீர்கள். தமிழில் வணக்கம் என்பதை
மரியாதை
நிமித்தமாகத்தான் சொல்கிறோம் என்று நீங்கள் கூறினாலும் வணக்கம் என்பதற்கு
வணங்குகிறேன் என்றே பொருள். இது மதங்களைவிட்டும் விடுபட்ட நீங்கள்
மதங்கள் சொல்லும்
கடவுள் வழிபாட்டிலிருந்து இன்னும் மீளமுடியாத நிலையைத்தான் காட்டுகிறது.
இஸ்லாம்
அல்லாத பல கடவுட் கொள்கையுள்ள வேறு மதத்தினர்கள் இவ்வாறு எழுதியிருந்தால்
ஓரளவாவது
சகித்துக் கொள்ளலாம். மதங்கள் அனைத்தும் மக்களிடையே மூடநம்பிக்கையை
வளர்கிறது
என்பதை ஆய்வு செய்துள்ள நீங்கள்
‘அனைவருக்கும்
வணக்கம்’
என்ற
மூடநம்பிக்கையை இன்னும் கைவிடாதது ஏனோ?
எனினும் இஸ்லாத்தை ஆராய முற்பட்டுள்ள
உங்களுக்கு முதலில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இஸ்லாத்தை
தாங்கள் திறந்த மனதுடன் ஆய்வுசெய்ய முற்படுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
நீங்கள்
பொதுப்படையாக விளக்கம் கேட்டமையால் எமக்குத் தெரிந்த விளக்கத்தை
அளிக்கின்றோம்.
நாஸ்திகம்
அறிவுப்பூர்வமானதா?
இந்து மனுதர்மத்தின் பெயரால் நடந்த
கொத்தடிமைத் தனமும் ஜாதிய துவேஷமும் தமிழகத்தில் தலைவிரித்தாடிய
காலகட்டத்தில்
மதத்தின் பெயரால் அன்று நடந்த சுரண்டலை வீரியமாக எதிர்த்து களம்
புகுந்தவர்
பெரியார் அவர்கள். மதத்தின் பெயரால் நடந்த சுரண்டலை ஒழிக்கவேண்டுமெனில்
மதங்களை
இல்லாமலாக்க வேண்டும் என்ற முடிவிற்கு நாத்திக நண்பர்கள் அன்று வந்தனர்.
ஒவ்வொரு
மதமும் கடவுள் நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே மதங்களை
ஒழிக்கவேண்டும்
என்றால் மதங்கள் சொல்லும் கடவுளையும் ஒழித்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்திற்கு
நாத்திக நண்பர்கள் தள்ளப்பட்டனர். கடவுளையும் மதங்களையும்
ஒழித்துவிட்டால் ஜாதிய
வேறுபாட்டையும் சுரண்டலையும் ஒழித்துவிடலாம் என்ற அடிப்படையிலேயே
தமிழகத்தில்
நாஸ்திகம் வேரூண்டியது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
கள்
குடிப்பது கூடாது. குடி குடியைக் கெடுக்கும்,
இது
அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மை.
மக்களை இந்த உண்மையை உணர வைத்து அவர்களை குடியை விடச்செய்வதே
அறிவுள்ளவர்கள்
செய்யும் நல்ல முயற்சி. தென்னை மரத்திலிருந்துதானே கள் வருகின்றது,
தென்னை மரத்தை
வெட்டி வீழ்த்தி விட்டால்,
கள்
குடி ஒழிந்துவிடும் என்று தென்னை மரங்கள்
அனைத்தையும் வெட்டி வீழ்த்துபவனை அறிவாளி என்று அறிவாளிகள் சொல்ல
மாட்டார்கள்.
மாறாக,
தென்னை மரத்தைக் கொண்டு மக்கள் பெறும் நல்ல பல பலன்களை இழக்க நேரிடும்
என்பதே உண்மையாகும்.
குடிகாரன் தென்னை மரத்திலிருந்து கள் கிடைக்கவில்லை
என்பதற்காகக் குடியை விடப்போவதில்லை. ஸ்பிரிட்டைக் காய்ச்சிக் குடிக்க
ஆரம்பிப்பான். அவனுக்கு வேண்டியது போதை. அந்தப் போதையை எப்படி எல்லாம்
பெற்றுக்
கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் பெற்றுக் கொள்ள முயல்வான். குடியை ஒரு
போதும்
விடமாட்டான். இதேபோல் மூட்டைப் பூச்சி தொல்லைத் தாங்கமுடியவில்லை
என்பதற்காக
வீட்டைக் கொளுத்தி விட்டு காட்டில் போய் அவதிப்படமாட்டான் அறிவுள்ள
மனிதன்.
வீட்டிலிருந்து கொண்டே மூட்டைப்பூச்சித் தொல்லையைப் போக்க உரிய வழியையே
பார்ப்பான்.
எனவே மதங்களுக்கு அப்பாற்பட்டள்ள,
நீங்கள் மதங்கள் மூடநம்பிக்கையை வளர்க்கிறது என்பதில் ஆழ்ந்த
நம்பிக்கையுமுள்ள
நீங்கள் உங்களின் இம்முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். இஸ்லாம்
அறிவுப்பூர்வமானதா
என்று வினவுவதற்குமுன் உங்கள் நம்பிக்கையும் நிலைபாடும் அறிவுப்பூர்மானதா
என்பதை
சற்று நிதானத்துடன் சிந்தியுங்கள்.
பகைமையையும்
மூடநம்பிக்கையையும் ஒழித்த மார்க்கம் இஸ்லாம்
மதங்கள்
அனைத்தும் மக்களிடையே மூடநம்பிக்கையையும் பகைமையையும் வளர்கிறது என்பது
உண்மையானால்
''கடவுள்
இல்லை! இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை ஆக்கியவன்
அயோக்கியன்! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!"" என்று கோஷமிட்டு
தாங்கள் எந்த
மதங்களையும் சார்ந்தவர்கள் அல்ல என்று பிரகடனப்படுத்திய நாஸ்திகர்களிடையே
பகைமை
இல்லையா?
தமிழக நாஸ்திகர்கள் பலள குழுக்கலாக பிரியவில்லையா?
ஒருவரை ஒருவர்
விமர்சனம் செய்யவில்லையா?
எனவே பகைமை என்பது மதத்திற்கு அப்பாற்பட்டும் ஏற்படும்
என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
1427 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த அரேபிய தீபகர்பத்தில் குலப் பெருமையும்,
மொழி இன வேற்றுமையும் அதனால் ஏற்பட்ட பகைமையும் கொழுந்து
விட்டு எறிந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இறுதி
புனர்நிர்மானம் செய்யப்பட்ட இறைவழி கோட்பாடான தூய இஸ்லாம்,
அந்த மக்களை பகையை மறந்த உடன்பிறந்த சகோதர்களாக புடம்
போட்ட தங்கங்களாக மின்னச்செய்தது. வரலாற்று ஏடுகள் வரிகளால் பொறிக்கும்
அளவிற்கு அவர்களை வாழ்வாங்கு வாழச் செய்தது இஸ்லாம் அல்லவா?
உலகறிந்த பெர்னாட்ஷா முதல் மைக்கல் ஹார்ட் உட்பட
நம்நாட்டு காந்தியடிகள் வரை அவர்களை முன்மாதிரியாக புகழச்செய்த
மார்க்கமல்லவா இஸ்லாம்.
ஒரு
குழந்தையின்
பிறப்பு முதல் திருமணம் உட்பட இறப்புவரை மதகுருமார்களுக்கு தட்சிணை
வழங்கவேண்டும்
என்று கூறும் மதங்களிடையே,
மதத்தின் பெயரால் புரோகிதத்தை வன்மையாக ஒழித்த மார்க்கம்
இஸ்லாம். கடவுளை நெருங்குவதில் வழிபடுவதில் உயர்சாதி,
தாழ்ந்த குலத்தோன் என்று
தாங்களாகவே கற்பனை செய்து சக மனிதனை இழிவுபடுத்தும் இழிசெயலை
நிர்மூலமாக்கிக்
காட்டியது இஸ்லாம்.
மக்களிடையே இன்று நிலவும் பேய்,
பிசாசு போன்ற குருட்டு
நம்பிக்கைகள் நல்லநேரம் கெட்டநேரம் என சகுனம் பார்ப்பது,
படைப்பினங்களை
படைத்தவனாகக் கருதுவது,
மதத்தின் பெயரால் மூடச்சடங்குகள்,
ஜாதிய அடக்குமுறை மற்றும்
பிரிவினை,
பெண்ணடிமைத்தனம் போன்றவற்றை இஸ்லாம் வேறோடும் வேறடி மண்ணோடும் களைந்து
1400
ஆண்டுகளாக வரலாற்றில் நிரூபித்து விட்டதை சுயசிந்தனையுள்ள எவரும் அறிவர்.
எனவே மதங்கள் அனைத்தமே பகைமையையும் மூடநம்பிக்கையையும் வளர்க்கின்றன என
பொத்தாம் பொதுவாக நீங்கள் சொல்லாமல்
‘இஸ்லாம்
மார்க்கத்தைத் தவிர’
என்பதையும்
அதனோடு மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பதை நினைவூட்டுகிறோம்.
இஸ்லாம்
ஒரு
பகுத்தறிவு மார்க்கம் என்பதால் முஸ்லீம்கள் பகுத்தறிவு மிக்கவர்களாக
இருக்க
வேண்டும். இந்திய முஸ்லீம்கள் அனைவரும் இஸ்லாம் இங்கு அறிமுகமாவதற்கு
முன்னர்;
ஏதோ
ஒரு
மதத்தவராகத்தான் இருந்தனர். தமிழக முஸ்லீம்களைப் பொருத்தவரையில் பிற
மதத்தவர்களோடு கலந்து வாழும் சூழ்நிலையிலேயே உள்ளனர். முஸ்லீம்களில்
சிலர்
இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆனையும் நபிவழியையும் சரியான முறையில்
விளங்காத
காரணத்தால் மூடநம்பிக்கைகளும் வேற்று மத நம்பிக்கைகளும் அவர்களை
சூழ்ந்துள்ளது
உண்மைதான். அவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
பி.
ஜெய்னுலாபிதீன் என்ற இஸ்லாமியப் பெரியவர்
இஸ்லாத்தின் மூலாதாரம்
திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும்
மட்டுமே.
முஸ்லிம்களில் எத்தகைய செல்வாக்கு பெற்ற பேரறிஞர் ஆனாலும் இறைமார்க்கமான
இஸ்லாத்தின் கோட்பாடுகளில் எள்முனையளவும் கூட மாற்றம் செய்வதற்கு
அதிகாரம்
எவருக்கும் வழங்கப்படவில்லை. ஏன் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) போன்ற
இறைத்தூதர்களுக்குக்கூட இதே விதிதான் எனும் போது மற்ற அறிஞர்கள்
எம்மாத்திரம்?
இஸ்லாம் மதத்தை வளர்க்க பி ஜெயினுலாபிதீன் என்ற இஸ்லாமியப் பெரியவர்
நிகழ்ச்சி நடத்துகிறார் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நபிகள்
நாயகம்
முஹம்மது (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய
மார்க்கத்தை எவராலும் இனி வளர்க்க இயலாது,
வளர்க்க வேண்டிய அவசியமுமில்லை. எனவே
‘இஸ்லாம்
மதத்தை வளர்க்க’
என்ற சொற்றொடரை நீங்கள் நீக்கிவிடுவதே சிறந்தது.
காலச் சூழலில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கையில் கூடுதல் குறைதல்
ஏற்படலாம்.
ஆனால் இறை மார்க்கமாம் இஸ்லாமியக் கோட்பாட்டில் ஏதும் குறைவு ஏற்பட்டு,
பின்னர்
முஸ்லீம்களில் சிலர் அதை வளர்க்கும் நிர்பந்தத்தில் முஸ்லீம்களாகிய
எங்களை அல்லாஹ்
ஒருபோதும் வைத்திருக்க வில்லை. ஏனெனில் இம்மார்க்கம் இவ்வுலகைப் படைத்த
இறைவனால்
என்றோ முழுமைப் படுத்தப்பட்டு விட்டது.
சகோதரர் பி ஜெயினுலாபிதீன் அவர்களின்
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் போன்ற இஸ்லாமிய நிகழ்ச்சிகளால் வேற்று
மதத்தவர்கள்
இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு தங்களையும் இஸ்லாத்தில் இணைத்துக்கொள்வதை
கருத்தில்
கொண்டு இப்படி எழுதியிருக்கலாம். ஊர் சிரித்தது என்றால் ஊரின் மக்கள்
சிரித்தனர்
என்று பொருள் கொள்வது போல முஸ்லீம்கள் தங்கள் எண்ணிக்கையில் வளர்கின்றனர்
என்று
நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள சகோதரர் பி
ஜெயினுலாபிதீன் அவர்கள் ஒரு சாதாரன மனிதர். அவர் இஸ்லாத்தின் பல
விஷயங்களை ஆய்வு
செய்கிறார் என்றாலும் இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவர் மூலாதாரம்
ஆகமாட்டார். அவர்
ஆய்வு செய்யும் விஷயங்களில் மனிதன் என்ற அடிப்படையில் சரியும் இருக்கம்
தவறுகளும்
இருக்கும். சகோதரர் பி ஜெயினுலாபிதீன் அவர்களே பல நிகழ்ச்சிகளில்
இவ்விஷயத்தை
விளக்கியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வகையில் ஆய்வு
செய்யப்பட
வேண்டியதே சமீபத்தில் அவர் நடத்திய முபாஹலா (முக்காபுலா அல்ல)
நிகழ்ச்சியும்.
குர்ஆன் கூறும் முபாஹலா
நிகழ்வின் பின்னனி.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின்
உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின்
‘குன்’
(ஆகுக)
எனக் கூறினான். அவர் மனிதர் ஆகிவிட்டார். நபியே! ஈஸாவைப் பற்றி உம்
இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும். எனவே இதைக் குறித்து ஐயப்படுவோரில்
நீரும்
ஒருவராகிவிடாதீர்.
இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும்
எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்
‘வாருங்கள்!
எங்கள்
புதல்வர்களையும்,
உங்கள் புதல்வர்களையும் எங்கள் பெண்களையும்,
உங்கள் பெண்களையும்
எங்களையும் உங்களையும் அழைத்து ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு
‘பொய்யர்கள்
மீது
அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’
என்று நாம் பிரார்த்திப்போம்!’
என
நீர்
கூறும்.
நிச்சயமாக இதுதான் உண்மையான
வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன்
யாவரையும்
மிகைத்தோன் மிக்க ஞானமுடையோன் (திருக்குர்ஆன்
3 : 59 – 62)
மேற்கண்ட
வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்கையின்
9
ம்
வருடத்தில் (ஹிஜ்ரி
9ல்)
அருளப்பட்டதாகும். இவ்வசனங்கள் ஒரு வரலாற்றை பின்னனியாகக் கொண்டது.
அதாவது நபி
முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் நஜ்ரான் பிரதேசம் கிருத்தவ பாதிரிகள்
நிறைந்த
ஒரு
தேசமாக இருந்தது. இஸ்லாமிய மார்க்க போதனைகளை சற்று அறிந்த அவர்கள்,
முஹம்மது
(ஸல்)
அவர்களை சந்தித்து இஸ்லாத்தை அறிவதற்காகவும் தங்களின் கிருத்துவக்
கொள்கைகளைப் பற்றி விவாதிப்பதற்காகவும் அறிவு ஜீவிகளோடும்,
பாதிரிமார்களோடும் மதினா
நகர் வந்திருந்தனர்.
அவர்களோடு முஹம்மது (ஸல்) அவர்கள் பல நாட்கள்
கருத்துப்பரிமாற்றம் செய்தனர். இருப்பினும் அக்கிருத்தவப் பாதிரிகள் நபி
ஈஸா (அலை)
அவர்களை இறைவனின் மகன் என்றே வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
நபி ஈஸா
(அலை)
அவர்களை இறைவனின் மகன் அல்ல மாறாக அல்லாஹ்வுடைய அடிமையும் சங்கைமிக்க
இறைத்தூதர்களில் ஒருவரும் ஆவார் என்பதை பல வகையிலும் அவர்களிடம்
நிரூபித்தும்
அப்பாதிரிமார்கள் தங்கள் நிலைகளில் பிடிவாதமாகவே இருந்தனர். அந்த
சமயத்தில்தான்
மேற்கண்ட இறைவசனம் ஒரு கட்டளையாக இறங்கியது.
இதன் அடிப்படையில்
இறைக்கட்டளைக்கு இணங்க நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் மனைவி மக்களோடு
ஒரு
சமவெளிக்கு வருவதாகவும் பாதிரிமார்களும் அவ்வாறே வரவேண்டும் என்று
அழைப்பு
விடுத்தார்கள். தங்கள் விவாதங்களில் உண்மையில்லை என்பதை உணர்ந்த
அப்பாதிரிகள் மதினா
நகரில் இறை சாபத்தின் விளைவைப்பற்றி வினவினர். பின்னர் முஹம்மது (ஸல்)
அவர்களின்
இவ்வழைப்பை ஏற்காமல் பின் வாங்கிவிட்டனர். இதுவே நடந்த உண்மை வரலாற்று
சம்பவம்.
இதிலிருந்து சில விபரங்களை நீங்கள் தெரிந்து கொள்வதும்
அவசியமாகும்.
1.
இதற்கு முன்னர்
முபாஹலா என்று ஒன்று இஸ்லாமிய வரலாற்றில் நடந்ததாக எந்தச் சான்றும்
இல்லை. மேற்கண்ட
வசனங்கள் அப்பாதிரிமார்களின் வரம்பு மீரிய விதண்டாவதத்தால் நபி முஹம்மது
(ஸல்)
அவர்களுக்கு அந்த சமயத்தில் மட்டும் இறைவனால் வழங்கப்பட்ட விஷேச
அனுமயேயன்றி இது
பொது அனுமதியல்ல. நபிமார்கள் சிலருக்கு சில கட்டளைகளையும்,
சில கடமைகளையும்,
சில
அற்புதங்களையும் விஷேசமாக இறைவன் வழங்கியுள்ளது போன்றே இதையும் புரிந்து
கொள்ள
வேண்டும்.
2.
ஏனெனில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள்,
தம் மனைவி ஆயிஷா (ரழி)
அவர்களின் கற்பின் மீது சுமத்தப்பட்ட அவதூறு உட்பட இதைவிட பல சிக்கலான
சமயத்தில்
கூட இந்த
3:61
வசனத்தை வைத்துக் கொண்டு யாரையும் முபாஹலாவுக்கு அழைக்க வில்லை.
மேலும் நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பாடம் பயின்ற
நபித்தோழர்களின்
வாழ்க்கையிலோ அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினரிடமும் கூட இத்தகைய
முபாஹலா
அறைகூவல் நடைபெற்றதாக எந்தத் தகவலும் இல்லை.
3.
நபி முஹம்மது (ஸல்)
அவர்களின் மறைவிற்குப் பின்னர் நபித்தோழர்களிடையே ஏற்பட்ட கருத்து
வேறுபாடுகளினாலும்,
யூத சூழ்ச்சிகளினாலும் அவர்கள் தங்களுக்குள் ஆயுதம் தூக்கும்
அளவிற்கு நிலைமை மோசமடைந்தது. அந்தக் கால கட்டத்தில் கூட நபித்தோழர்களில்
ஏதேனும்
ஒரு பிரிவினர் தங்களின் நிலைபாடுதான் சரி என நிரூபிப்பதற்கு இதே முபாஹலா
ஆயுதத்தை
கையில் எடுத்திருக்கலாம். அவ்வாறு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. இது
போன்ற பல
வரலாற்று நிகழ்வுகளையும் வைத்து பார்க்கும் போது முபாஹலா என்பது நபி
முஹம்மது (ஸல்)
அவர்களுக்கு அந்த சமயத்தில் மட்டும் இறைவனால் வழங்கப்பட்ட விஷேச
அனுமதியாகும்
என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
4.
மக்கள் தங்களுக்குள் ஏற்படும்
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு சமாதான வழிகளையோ அல்லது நீதிமன்றங்களையோ
நாடவேண்டும்
என்பதே இஸ்லாம் கூறும் வழிமுறையாகும். திருக்குர்ஆனின்
3:61
வசனத்தை வைத்து குர்ஆன்
முபாஹலா செய்யத் தூண்டுகிறது என்றோ,
முஹம்மது (ஸல்) அவர்களால் முபாஹலா என்ற சாபம்
கோரும் நிகழ்வு நிகழ்த்தப்பட்டது என்றே,
ஒருவரின் சாபம் ஒருவர் மீது விழுந்தது
என்றோ கருதமுடியாது,
அதற்கு இவ்வசனத்தில் எந்த ஆதாரமும்
இல்லை.
கிருத்தவர்களின்
நம்பிக்கை பொய்யானதே! அடிப்படையற்றதே!
ஆதி மனிதரான ஆதம் (அலை)
அவர்கள் செய்த பாவம் மற்ற மனிதர்களுக்கும் பிறப்பால் வந்தடையும் என்றும்
அதை ஏசு
(நபி
ஈஸா (அலை)) சிலுவையில் மரணித்து தன் இரத்தத்தால் களைந்தார் எனவும்
கிருத்துவர்கள் நம்புகிறார்கள்.
நபி
ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் பாவங்களைப்
போக்குவதற்காக சிலுவையில் மரணித்தார்கள் என்று நம்புபவர்களிடம் நாம்
ஒருசில
அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். அவைகளாவன
1.
கிருத்துவர்களின் நம்பிக்கைபடி நபி ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின்
பாவங்களைப்
போக்குவதற்காக சிலுவையில் மரணித்தார்கள் என்பது உண்மையானால் எத்தனை
மனிதர்களின்
பாவங்களை நீக்குவதற்காக?
அல்லது எத்தனை வருடங்கள் வரை வாழ்ந்த,
வாழ
இருக்கின்ற
மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காக?
2.
நபி
ஈஸா (அலை) அவர்கள் மரணத்திற்கு
முன்புவரை வாழ்ந்தவர்களின் பாவங்கள் மட்டும்தான் நீக்கப்பட்டதா?
ஆம்
எனில் நபி ஈஸா
(அலை)
அவர்களுக்குப்பிறகு
2000க்கு
மேற்பட்ட வருடங்கள் உருண்டோடி விட்டனவே இந்ந
2000
வருடங்கள் மனிதர்கள் செய்த பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில்
உயிர்நீக்கப்போவது யார்?
3.
இல்லை இல்லை நபி ஈஸா (அலை) அவர்கள் மரணித்தது
இந்த உலகம் தோன்றியது முதல் அழியும்வரை உள்ள ஒட்டுமொத்த மனிதர்களின்
பாவங்களையும்;
போக்குவதற்காகத்தான் என்று கூறுவதாக இருந்தால் இப்போது வாழும் மனிதர்கள்
ஏதேனும்
கொடிய பாவங்கள் செய்துவிட்டால் கிருத்துவர்களின் பார்வையில் அவர்களின்
நிலை என்ன?.
இப்படி நம்புபவர்கள் தங்களின் வீடுகளில் திருட்டு,
கொலை,
கொள்ளை போன்ற பாதிப்புகள்
நடந்து விட்டால் அதற்காக அவர்கள் காவல்துறையினரையும்,
நீதிமன்றங்களையும்
அனுகமாட்டார்களா?
இவர்கள் நம்பிக்கையின்படி நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில்
மரணித்து மனிதர்களின் யாவரின் பாவங்களையும்;
போக்கிவிட்டபடியால் அவ்வாறு திருட்டு,
கொலை,
கொள்ளை போன்ற குற்றங்கள் புரிந்தவனை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களோ?
இப்படி நம் பாவங்களை எல்லாம் ஏசு கழுவி பரிசுத்தப்படுத்திவிட்டார் என்ற
நம்பிக்கையில்தானோ என்னவோ மேற்கத்திய கிருத்தவ உலகம் கொலை,
கொள்ளை,
கற்பழிப்பு
மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் சிக்கித்தவித்தும்;;,
பெண்களை போகப்
பொருளாகக்காட்டி அதிலேயே மூழ்கி பலவகை பால்வினை நோய்களுக்கும் ஆளாகி
'எயிட்ஸ்"
போன்ற கொடிய ஆட்கொள்ளி நோய்களினால் செத்துமடியும் இழிநிலையில்
இருப்பதையும் நாம்
கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய அவல நிலையை இஸ்லாம் வேரோடும் வேரடி
மண்ணோடும்
கலையும் முகமாக நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் திருமறை குர்ஆனில்
பின்வருமாறு குறிப்படுகிறான்.
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய -
மர்யமின் குமாரராகிய மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும்
(அவர்கள்
சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை,
அவரை அவர்கள் சிலுவையில்
அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன்
ஒப்பாக்கப்பட்டான்;.
மேலும்
இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள்;
அதில் சந்தேகத்திலேயே
இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு
இதில் எத்தகைய
அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை.ஆனால் அல்லாஹ்
அவரைத்
தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும்
ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன்
4:157, 158)
இன்னும் மர்யமுடைய மகன் ஈஸாவே,
'அல்லாஹ்வையன்றி
என்னையும்
என்
தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர்
கூறினீரா?"
என்று அல்லாஹ் கேட்கும் போது அவர்;
''நீ
மிகவும் தூய்மையானவன்;
எனக்கு
உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ
அதை
நிச்சயமாக அறிந்திருப்பாய்;
என்
மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை
நான் அறிய மாட்டேன்;.
நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்"" என்று
அவர் கூறுவார்.
''நீ
எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை
நோக்கி)
''என்னுடைய
இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்
என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும் நான்
அவர்களுடன்
(உலகில்)
இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;.
அப்பால் நீ
என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய்.
நீயே
எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்….""
(திருக்குர்ஆன்
5 : 116, 117)
எனவே நபி (ஈஸா) அலை அவர்களை எவரும் சிலுவையில்
அரையவுமில்லை,
அவர் யாருக்காகவும் உயிர் நீக்கவுமில்லை. கிருத்துவர்களின் நிலைபாடு
பொய்யானது,
அடிப்படையற்றது,
ஏமாற்றம் தரக்கூடியது. அவர்கள் யாருடைய பாவத்தையும்;
கழுவதற்காகவும் மரணிக்கவில்லை மாறாக அல்லாஹ் அவர்களை இவ்வுலகத்தை
விட்டும்
உயர்த்திக் கொண்டான் என்று திருமறை குர்ஆன் கூறுவதை ஏற்றுக்கொள்வதால் நம்
பாவங்களை
எல்லாம் ஏசு கழுவி பரிசுத்தப்படுத்திவிட்டார் என்ற தவறான நம்பிக்கையால்
விளைந்த
அனாச்சாரங்களிலிருந்து அதில் வீழ்ந்தவர்கள்;
நிச்சயம் மீளமுடியும்.
மனிதன்
பிறப்பால்
பாவம் செய்தவனா?
மனிதனின் படைப்பு பற்றி திருக்குர்ஆன்
கூறுகையில்
இறைவன் முதலில் நபி ஆதம்
(அலை)
அவர்களை மண் |