|
Home
பாகம் : 1/2
ஹெராயின் போதையே!! ஹிட்லரின் வாரிசே!!!
இவ்வுலகில் சமத்துவ சரித்திரம் படைத்த சத்திய மார்க்கம் இஸ்லாம். இஸ்லாம்
என்னும் இறையளித்த திருநெறியை இறுதியாக கட்டமைக்க வந்தவர் அல்லாஹ்வின்
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவர். அன்பு,
அமைதி,
கனிவு பணிவு,
மன்னித்தல் போன்ற அழகிய குணங்களின் தாயகமாம் நபிகள் நாயகத்தின்
நற்பண்புகளை மாற்று கொள்கையுடைய அறிஞர்களும் வியந்து பாராட்டுவதை நாம்
அனைவரும் அறிவோம்.
ஆனால் குறுமதி படைத்த சில அரக்கர்கள் நபிகள் நாயகத்தையும்,
இஸ்லாமிய மார்க்கத்தையும் தங்கள் பொய் கற்பனைகள் மூலம் தூற்றுவதையே
முழுநேரப் பணியாக கருதி களம் கண்டுள்ளனர். அத்தகைய புரட்டுகளைக் களையும்
முகமாக தமிழ் கூறும் நல்லுலகிற்கு அதன் உண்மைகளை அவ்வப்போது நாம் விளக்கி
வருகிறோம். அவ்வரிசையில் மற்றொரு அவதூறு
//முகம்மதுவைத்
திட்டினால்,
கர்ப்பிணிப்பெண் என்றும் பார்க்காமல் வயிற்றில் குத்திக்
கொன்று விட்டு வா,
உன் மீது எந்த குற்றமும் சாத்தாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று
முகம்மது சொல்கிறான். இப்படி போதிக்கும் மதத்துக்கு என்ன தண்டனை
கொடுக்கலாம்?
இந்த முகம்மதுவின் வழியில் ஜிகாதிகள்,
அப்பாவிகளை,
பொதுமக்களை,
ஆயுதம் தாங்காத
பெண்களையும் குழந்தைகளையும் முதியவரையும்
“இஸ்லாமிய
முறையில்”
கழுத்தை அறுத்து
கொல்வது.....//
இவ்வாறு கதையளந்துள்ளனர். என்ன சிரிப்பு வருகிறதா?
ஆக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.
இத்தேசவிரோத கும்பலின் இதுபோன்ற கட்டுக்கதைகள் ஒன்றும் கவைக்குதவாது
என்பதை மக்கள் அறிந்தே வைத்துள்ளனர். காரணம் கொலைவெறி பிஜேபி,
விஹெச்பி,
பஜ்ரங்தள்,
சிவசேனா போன்ற சங்பரிவார தீவிரவாத இயக்கங்களின் பயங்கரவாதத் தலைவர்கள்
சூரியன் சற்று சாய்ந்துவிட்டாலே தினம் மது,
ஹெராயின்,
கஞ்சாக்களில் மூழ்கி விடுவது வழக்கம். பின்னர் தலைக்கேறிய போதையின்
காரணத்தால் இந்தியா இந்துத்துவாவிற்கே,
முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டுங்கள்,
பாரதமாதாக்கி ஜே! என்று வெறிக் கூச்சலிடுவர். பிறகு விடிந்ததும் நிலைமையை
சுதாரித்துக் கொண்டு நாமெல்லாம் இந்தியர்கள்,
வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தேசிய ஒருமைப்பாடு,
என்று பத்திரிக்கையாளர்களை அழைத்து பேட்டி கொடுப்பர். இவ்வாறாக போதையில்
இந்துத்துவாவையும் சற்று தெளிந்ததும் தேசியத்தையும் பேசுவது இந்துத்துவ
தீவிரவாத தலைவர்களுக்கு வழக்கம்தானே.
இதற்கு சிறந்த உதாரணமாக தமிழக முதல்வரின் தலையை வெட்டுவேன்,
நாக்கை அறுப்பேன் என்று சமீபத்தில் வேதாந்தி என்ற வேதாளம் புலம்பியதை
எவரும் மறக்க இயலுமா என்ன?
அத்தலைவர்களுக்கு சளைத்தவர்களா நம் தமிழகத் தொண்டர்கள்?
தலைவர்கள் பாணியில் தொண்டர்களும் எதையாவது ஊத்திவிட்டு வாயில் வந்தபடி
நபிகள் நாயகத்தைப் பற்றி இப்படி எழுதியுள்ளனர். இவ்வாறு உளரும்போது
மேற்படியார்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும். மற்றபடி அந்த அவதூறு ஆக்கத்தில் விஷயம் ஒன்றுமில்லை.
அழகிய உபதேசங்கள் இவர்களுக்கு பயனளிக்காது
நபிகள் நாயகத்தின் மீது அவதூறு சுமத்தியது மட்டுமல்லாது அதே ஆக்கத்தில்
//
குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் உள்ளது என்று மேற்கத்திய அறிஞர்களை
முஸ்லிம்கள் சொல்ல வைத்துள்ளனர். இதற்காக அவ்வறிஞர்களுக்கு
பெட்ரோடாலர்கள் கொடுக்கப்பட்டது. கொடுத்தது யார் தெரியுமா உஸாமா பின்
லேடன்.
//
இப்படியும் எழுதியுள்ளனர். ஏதோ உஸாமா பின் லேடன் உலக ரிசர்வ் வங்கியின்
தலைவராகவும்,
உலக வர்த்தக மையங்களின் இயக்குனராகவும் இருப்பதுபோன்று நினைத்துக் கொண்டு
இவ்வாறு கதையளந்திருப்பது சுத்த மென்டல்தனமாக இல்லையா?.
நண்பர்களே இதற்கு எப்படி பதில் சொல்லச் சொல்கிறீர்கள். இவர்களின்
சிறுமூளையில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தையல்லவா இது காட்டுகிறது. இந்த
லட்சனத்தில் அந்த அபத்தக் கட்டுரைக்கு பெட்ரோ டாலரே பின்லேடன் வழியே என்ற
தலைப்புவேறு.
தங்களிடம் சொந்த சரக்குகள் இல்லை என்பதால் மேற்கத்திய யூத
கிருத்துவர்களின் விஷம்கக்கும் இணையதளங்களில் வெளியிடப்படும் நச்சு
நரகல்களை அப்படியே தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு உண்மையிலேயே இஸ்லாத்தைப் பற்றி ஆராயும் எண்ணம் கொஞ்சமாவது
இருந்தால் யூத கிருத்துவர்களின் அத்தகைய தவறான குற்றசாட்டுகளுக்கு
முஸ்லிம்கள் என்ன பதில் அளித்துள்ளனர் என்பதை நிச்சயம் தேடியிருப்பர்.
இஸ்லாத்திற்கு எதிராக ஆங்கிலத்தில் வெளியாகும் அவ்வாக்கங்கள்
அனைத்திற்கும்
http://answering-christianity.org/ac.htm
போன்ற
முஸ்லிம் இணையதளங்களால் உடனுக்குடன் பதில் சொல்லப்பட்டிருப்பதை பார்த்து
விளங்கியிருப்பர். ஆனால் இவர்களின் நோக்கம் அதுவல்லவே!. இவர்களுக்கு
சத்தியத்தை விளங்க வேண்டும் என்ற எண்ணம் எள்முனையளவும் இல்லை. வாங்கிய
ரகசிய கைக்கூலிக்கு எப்படியாவது மாரடித்து ஆகவேண்டும் என்ற
நிர்பந்தத்தில் இஸ்லாத்தின் மீதும்,
நபிகள் நாயகத்தின் மீதும்,
முஸ்லிம்களின் மீதும் சேற்றைவாரி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இவர்களுக்கு பதிலளிப்பதும் பட்டுபோன பாழ்நிலத்தில் நீர்
பாய்ச்சுவதும் ஒன்றுதான். இருப்பினும் இவர்களின் சொத்தை வாதத்தின் கொடும்
அபாயத்தை உணர்ந்ததாலும்,
அதை தெளிவுபடுத்தும் கடமை நமக்கு இருக்கின்ற காரணத்தாலும் இங்கு நாம்
பதிலளித்துக் கொண்டிருக்கிறோம். இவர்கள் சாந்தி பெறட்டுமாக! அல்லாஹ்
இவர்களை நேர்வழியில் செலுத்தட்டுமாக!. அல்லது நாம் முஸ்லிம்கள்
என்பதற்கு இவர்கள் சாட்சியாக இருக்கட்டும் என்பதுதான் இவர்கள் மீது நாம்
உள்ள நிலைபாடு.
நபியே! உம் இறைவனின் பாதையில் மக்களை விவேகத்துடனும்,
அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,
அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன்,
அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் அவன் வழியைச் சார்ந்து நேர்வழி
பெற்றவர்களையும் நன்கு அறிவான்
(16:125).
இவ்வாறு திருமறை குர்ஆன் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறது.
ஆனால் முஸ்லிம்களின் அழகிய அழைப்பை செவிமடுக்கவோ,
நமது உபதேசத்தை விளங்குவதற்கோ என்றும் இவர்கள் தயாராக இல்லை. நாய் வாலை
நிமிர்த்த முடியாது என்ற பழமொழிக்கு உதாரணப் புருஷர்களாக நாங்கள்தான்
இருப்போம் என்ற முடிவிற்கு இவர்கள் வந்துவிட்டார்கள் போலும். இறைவனால்
முத்திரை வைக்கப்பட்டுவிட்ட இவர்களின் இதயங்களை நம்மால் திறக்க இயலுமா
என்ன?
மன்னிப்பதில் சிகரமாகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்
சண்டையில் தன் எதிரியை வீழ்த்துபவன் வலிமையாளன் அல்ல கோபம் வரும்போது
தன்னை அடக்கிக் கொள்பவனே வீரன் என்று முஹம்மது (ஸல்) அவர்கள்
உபதேசித்துள்ளார்கள். அவர்கள் தம்வாழ்வின் அதன்படி நடந்தும்
காட்டினார்கள். மன்னிப்பது என்பது,
தான் வலிமையாளனாக இருந்து தன்னைவிட வலிமை குறைந்தவனிடம் இரக்கம் கொண்டு
அவனை தண்டிக்காமல் விட்டு விடுவதாகும்.
மக்கத்து வாழ்க்கையில் அவர்கள் தொழுது கொண்டிருந்தபோது குறைஷி காபிர்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கழுத்தின் மீது நாற்றமெடுத்த ஒட்டகக்
குடலை வைத்து நோவினை செய்தார்கள். அச்செயலுக்காக அவர்களை மன்னித்தார்கள்.
அதே மக்கா நகரை ஆளும் மாமன்னராக தாம் பொறுப்பேற்ற போதும் அச்செயலை
செய்தவர்களையோ,
அதற்குத் துணை போனவர்களையோ எந்தவிதத்திலும் தண்டிக்கவில்லை.
அய்யாமுல் ஜாஹிலிய்யா என்ற மடமை காலத்தின் நடந்த கொலைக்கு பலி
தீர்ப்பதும்,
பகைமையை பல தலைமுறையினர்களாக வளர்த்துக் கொள்வதும் அன்றைய அரபி
வம்சங்களில் நிலை. முஹம்மது (ஸல்) அவர்களோ தனது இறுதி ஹஜ்ஜின் பேருரையின்
போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். மடமை காலத்தில் நடந்த கொலைக்கு
பலி தீர்ப்பது என்ற கொடுஞ்செயல் இன்று முதல் நிறுத்தப்படுகிறது என்று
பிரகடனப்படுத்தினார்கள்.
மக்களே அஞ்ஞான
காலத்தில் (இஸ்லாதிற்கு முன்பு ஏற்பட்ட) கொலைகளுக்கும்,
கொடுஞ்செயல்களுக்கும் பலிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டு
விட்டது. முதலாவது எனது குடும்பத்தைச் சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரித் இப்பு
அப்துல் முத்தலிபின் கொலைக்கு பலிவாங்குவதை நான் மனப்பூர்வமாக
நிறுத்திவிட்டேன் (அறியாமைக் காலத்தில் நிலவிய பலிக்குப்பலியும்,
உயிர்ப்போக்கும் மடமையும் இனி கூடாது) என்று அறிவித்தார்கள்.
(முஸ்லிம்
2334,
இப்னுமாஜா
3074)
மதீனத்து நயவஞ்சகர்கள் தன் மீது தொடர்ந்து வசைமாரிப் பொழிந்து
கொண்டிருந்த போதும்,
இஸ்லாத்திலிருப்பதுபோல் நடித்துக் கொண்டு மதீனாவில் அவர்கள் பல
குழப்பங்களை செய்த கட்டத்திலும் அவர்களை எல்லாம் நபி (ஸல்) அவர்கள்
மன்னித்து விட்டுவிட்ட வரலாறு இன்றும் உயிரோடுதான் உள்ளது.
போர் செய்யும் போது பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்களை தண்டிப்பதுதான்
மரபாகப் பேணப்பட்ட அக்காலத்தில்,
நபி (ஸல்) அவர்களோ பத்ரு பேரின்போது பிடிபட்ட குறைஷிப் படையின் கைதிகளை,
தங்களின் எதிரிகளாகப் பாவிக்காது மதீனாநகர் சிறுவர்களுக்கு அக்குறைஷிகள்
கற்றிருந்த கல்வியிலிருந்து எதையேனும் பயிற்றுவிக்கச் செய்து அவர்கள்
அனைவரையும் மன்னித்து
விடுதலை செய்தார்கள். எதிரி நாட்டு போர் வீரர்களைக்கூட மன்னிக்கும்
நெஞ்சுரமிருந்த மாவீரரைத்தான் இவர்கள் இணையதளங்கள் மூலம் தூற்றிக்
கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் உஹது போரில் தமது சிறிய தந்தை ஹம்ஜா (ரழி) அவர்களை,
போர் விதிமுறைகளை மீறி மறைந்திருந்து தாக்கி ஷஹீதாக்கிய வஹ்ஷியையும்,
ஹம்ஜா (ரழி) அவர்களின் உடலை கிழித்து அவர்களின் ஈரலைக் கடித்துத்துப்பிய
ஹிந்தா
என்ற பெண்ணையம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவே செய்தனர்.
மேலும் மக்கா வெற்றியின் போது பல்லாயிரக்கனக்காக படைவீரர்களுடன்
மக்காநகரில் வெற்றி வீரர்களாக நபி (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள். அன்று
நபிகள் நாயகத்தைக் கொடுமைப் படுத்திய,
அவர்களை கொலை செய்யத்துணிந்த,
ஊரைவிட்டே அடித்து விரட்டிய அக்குறைஷியர்கள் என்ன நடக்குமோ என்று பயந்து
நடுங்கி வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த அவ்வேளையில்,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ குறைஷிகளே! உங்கள் மீது இன்றைய தினம் எந்தக்
குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் மன்னிப்பை பெற்று உரிய பாதுகாப்பைப்
பெறுகிறீர்கள் என்று பறைசாற்றியது வரலாறு பதிந்துவிட்ட வைர வரிகளாகும்.
இப்படி நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் பிறரை மன்னித்து கருணை புரிந்த
சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆக்கத்தின் நீளம் கருதி ஒரு
சிலவற்றை மட்டுமே இங்கு தந்துள்ளோம். இவ்வாறு மன்னிப்பின் சிகரமாகத்
திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத்தான் தன்னைத் திட்டியதற்காக
கர்ப்பிணிப்
பெண்ணின் வயிற்றைக் கிழித்து கொலை செய்துவிட்டு வா என்று
கட்டளையிட்டதாக புனைந்துன்ளார்கள்.
முஸ்லிம் ஊர்களில் கலவரங்களை ஏற்படுத்தி,
அவர்களின் பொருளாதாரத்தை சூறையாடுவதும்,
முஸ்லிம் பெண்களைக் கற்பழிப்பதும்,
அப்பாவிகளை கொலை செய்வதும்,
கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அவளின் வயிற்றில் குத்தி நிறைமாதக் கருவை
பெற்ரோல் ஊற்றி எரித்ததும் யார் என்பதை வரலாறு சொல்லும்,
இவ்வாக்கத்தின் இறுதியில் புரியும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
|