|
Home
தோல்வி பயத்தால் உண்மையடியான் தலைமறைவானார்.
அன்புள்ள இணைய வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
வலைபின்னல் (இன்டர்நெட்) என்ற இந்நூற்றாண்டின் அற்புதக் கண்டுபிடிப்பை
பயனுள்ள முறையில் பயன்படுத்த முனைந்துள்ள நல் தமிழ் கூறும்
நல்லலுள்ளங்களுக்கு மத்தியில்,
கள்ளிச் செடியாய் முளைத்துள்ள சில விஷவித்துக்கள்,
கண்ணியம் பண்பாடு போன்றவற்றை தூக்கிஎறிந்துவிட்டு,
தமிழ் இணையத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதை நீங்கள் நன்றாகவே
அறிவீர்கள். ஜாதி மத பேதமின்றி மாமன்,
மச்சான் என்று வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக மண்ணில்,
ரத்த ஆற்றை ஓட்டியே தீருவது என்று கங்கனம் கட்டிக் கொண்டு இந்த
விஷஜந்துக்கள் தங்களது எழுத்துவடிவிலான தீவிரவாதத்தை நம் தமிழக மண்ணில்
விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒருபக்கம் என்றால்,
மறுபக்கம் உலகம் போற்றும் உத்தம இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களை நாக்கூசும் அளவில் நரகல் நடையில் விமர்சித்தும்,
இஸ்லாத்தையும் இறைமறை குர்ஆனையும் இகழ்ந்துபேசிக்கொண்டு பொய்களையும்
புரட்டுகளையும் இணையத்தில் தொடந்து அள்ளி வீசுகிறது. அவைகளுக்கு
முற்றுப் புள்ளிவைக்கும் முகமாக,
நல்லுள்ளங்கொண்ட பலர் இஸ்லாத்திற்கு எதிரான அந்த தவறான
குற்றச்சாட்டுகளுக்கு தக்கபதிலளித்து வருகின்றனர்.
தன்முகத்தை மறைத்த,
தன் பெற்றோர் தனக்கிட்ட உண்மையான பெயரைக்கூட வெளியே தெரிவிக்க
வக்கில்லாத,
வக்கிரபுத்தி கொண்ட சிலர் என்னமோபோ என்ற பெயரில் திருட்டு வலைப்பூவை
நடத்துகின்றனர். மேற்படி திருட்டு இணையத்தின் புரட்டுகளை களைவதற்காக
இஸ்லாமிய இணையப் பேரவை வெளியிட்ட விளக்கத்திற்கு சம்மந்தமில்லாமல்
உண்மையடியான் என்பவர் உள்ளே புகுந்தார். தனக்கும் மேற்படி திருட்டு
இணையத்திற்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்திக் கொண்டார்.
கிருத்துவ லேபிளில் உலாவரும் ஆசாமியான இந்த உண்மையடியானையும் அவரது
கூட்டாளிகளையும் கடந்த
20-01-2008
அன்று நாம் பகிரங்க விவாதத்திற்கு அழைத்திருந்தோம். இஸ்லாம் பொய்யான
மார்க்கம் என்பதற்கு இவர்களிடம் தகுந்த ஆதாரங்கள் உண்மையிலேயே
இருந்திருந்தால் அதை நம்முன்னால் நிரூபிப்பதற்கு வந்திருக்கவேண்டும்.
நம் விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடிஒளிந்த
ஆசாமிகள்,
மக்களை திசைதிருப்புவதற்காக எங்களுடன் எழுத்துவிவாதத்திற்கு தயாரா
என்று நம்மிடம் கேட்டுள்ளனர். இப்படி அழைப்பதற்கு இவர்களுக்கு
தகுதியிருக்கிறதா என்பது ஒருபக்கம் இருக்க,
இவர்களைப் பார்த்து நாம் விடுத்த பகிரங்க அறைகூவல் இன்றுவரை
கிணற்றில்போட்ட கல்லாக கிடக்கிறது. இதுதான் இஸ்லாத்தை எதிர்ப்பவர்களின்
எதார்த்த நிலை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
இஸ்லாம் உண்மையான மார்க்கமல்ல என்றும்,
நபிகளாரைத் திட்டியும்,
குர்ஆனை அவமதித்தும் எழுதிக்கொண்டே இருக்கும் இவர்களிடம்
எழுத்துவிவாதம் என்பது பயனளிக்காது என்பதனாலேயே ஒரேமேடையில் அவர்கள்
எழுதிய விஷயங்கள் பொய் என்றும்,
இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்றும் திட்டவட்டமாக நிரூபிப்பதற்கு
பகிரங்க விவாத்திற்கு நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் ஓடிவிட்டார்களே!
எனவே நாம் விவாதிக்காமலேயே இவர்கள் இஸ்லாத்தை வெற்றிபெறச்
செய்துவிட்டார்கள். விவாதம் செய்யமுன்வராமல் நழுவியதின் மூலம் தங்கள்
தோல்லியை ஒப்புக்கொண்டு விட்டார்கள் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
சரி எழுத்து விவாதத்திற்கு அழைப்புவிடுக்கிறார்களே,
நாம் அவர்களுடன் விவாதிப்பதாக இருந்தால் அல்லது நம் பிரதிவாதத்தை
அவர்களுக்காக பதிவுசெய்கிறோம் என்பதாக இருந்தால் முதலில் அவர்கள்
விவாதத்தை வைக்கவேண்டும். விவாதம் இல்லாமல் பிரதிவாதம் செய்யஇயலுமா?.
இதை ஏன் நாங்கள் குறிப்பிடுகிறோம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கு
எதிராக விவாதிப்பதாக நினைத்துக்கொண்டு வெளியிடும் விஷயங்கள் அனைத்தும்
பொய்களாகவும்,
இவர்களின் கற்பனையில் உதித்த அவதூறுகளாகவுமே உள்ளன. இஸ்லாத்தை
எதிர்க்கிறோம் என்று தங்கள் மடமைத்தனத்தை உலகிற்கு
வெளிப்படுத்துகிறார்களே தவிர இவர்கள் இஸ்லாத்திற்கெதிராக உருப்படியான
எந்த விவாதத்தையும் செய்வதாகத் தெரியவில்லை.
முதலில் இன்டர்நெட்டில் இப்படி எழுத்துவிவாத அழைப்பிதல் என்று
வெளியிடுவது அவசியமா?
அறிவுடமையா?
சிந்தியுங்கள் நண்பர்களே. இணையத்தில் இவர்கள் விவாதிப்பதாக இருந்தால்,
இவர்கள் யாரை எதிர்த்து விவாதம் செய்கிறார்களோ அவர்கள் தங்கள்
பிரதிவாதத்தை தாங்களாகவே பதிவுசெய்வார்கள். இதற்கு அழைப்பு என்று
மதிமயக்கும் மாயாஜாலம் அவசியமில்லையே. இவர்களின் அழைப்பிதழைப்
பெறாமலேயே நம் இணையதளம் உட்பட பல இஸ்லாமிய இணையதளங்கள் இஸ்லாத்திற்கு
எதிரான கட்டுக் கதைகளுக்கு தகுந்த மறுப்பை வெளியிட்டுக் கொண்டுதானே
இருக்கின்றன. இஸ்லாத்தைப் பற்றி உறுப்படியான தகவல்களுடன்
அறிவுப்பூர்வமாக விமர்ச்சனம் செய்பவர்களுக்கு முஸ்லீம்கள் சிறந்த
முறையில் பதிலளித்துக் கொண்டுதானே இருக்கின்றனர்.
உதாரணமாக
இவர்கள் பொய்யாக புனைந்த நூற்றுக்கணக்கான கழிசடை அவதூறுகளை நாமும்
பார்வையிட்டுள்ளோம். அவற்றில் ஒருசிலவற்றிற்கு பதில் அளித்துள்ளோம்
மற்றவற்றை பதில்லளிக்காமல் விட்டுவிட்டோம். காரணம் எவரும் பதில்
சொல்லாமேலேயே இவர்கள் வெளியிட்ட அபத்தங்களை,
பொய்தான்,
பிராடுதான்,
புரட்டுதான்,
இஸ்லாத்திற்கு எதிரான இவர்களின் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடுதான்
என்பதை மக்கள் அதை படித்தவுடனேயே பளிச்சென்று விளங்கிக்கொள்வார்கள்.
மேற்கொண்டு நாம் விளக்கம்வேறு அதற்காக எழுதுவதற்கு அவசியமில்லை.
எனவேதான் இவர்கள் பதிவுசெய்பவைகளை பொரும்பாலானவற்றை கண்டுகொள்ளமல்
விட்டுவிடுகிறோம்.
நாம் பதில்சொல்லியிருக்கக் கூடிய ஒருசில விஷயங்கள் கூட,
இந்த அளவிற்கா இவர்கள் சிந்தனையில்லாமல் இருக்கிறார்கள்?
என்று இவர்களின் மீது நமக்கு ஏற்பட்ட அணுதாபம்தாம் காரணமேயல்லாமல் அந்த
ஆக்கங்களில் கூட இவர்கள் அறிவுப்பூர்வமாக எதையும் விவாதிக்கவில்லை.
இதுதான் உண்மை! எனவே நாம் எதற்கெல்லாம் பதில்சொல்லாமல் விட்டுவிட்டோமோ
அவைகளெல்லம் சுத்த ஹம்பக் என்று இவர்களாகவே உணர்ந்து
அழித்துவிடுவதுதான் அவர்களுக்கு நல்லது,
அழிக்காவிட்டால் எங்களுக்கொண்டும் நஷ்டமில்லை. காரணம் இவர்கள் என்னதான்
பாடுபட்டாலும்,
அல்லாஹ்வுடைய மார்க்கமாம் இஸ்லாத்தை,
இந்த சத்திய ஜோதியை இவர்கள் வாயால் ஊதி அனைத்துவிடமுடியாது. இந்த
இஸ்லாமிய மார்க்கத்தை நிலைபெற செய்யும் பொறுப்பை அல்லாஹ்
ஏற்றிருக்கிறான்.
இவர்கள் இதற்குமேலும் என்னதான் எழுதினாலும் மக்கள் அவைகளையெல்லாம்
பொருட்படுத்தாமல் இவர்களிடம் உண்மையிருக்குமானால் இஸ்லாமிய இணையப்
பேரவையுடன் ஏன் விவாதத்திற்கு செல்லவில்லை?
என்றே சிந்திப்பார்கள். இவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை
உண்மையிலேயே இருந்திருந்தால்
மேலம் இவர்கள் தங்கள் மதத்தின் வசுவாசமுள்ள உண்மை கிருத்துவர்களாக
இருப்பின்,
நம் விவாத அழைப்பை ஏற்று நம்மோடு பகிரங்க விவாதத்திற்கு
வந்திருப்பார்கள். நம்விவாத அழைப்பைக் கண்டு தோல்விபயத்தில் உறைந்தது
மட்டுமல்லாது எழுத்துவிவாதம் என்று எழுதி அதிலும் கடும் தோல்வியைத்தான்
இவர்கள் சந்தித்துள்ளார்கள்.
இன்னும் நாம் இவர்களுக்கு வைத்த நேரடி விவாத அழைப்பு இங்குள்ளது.
இவர்கள் எப்போது வேண்டுமானாலும் எம்மோடு நேரடி விவாதத்திற்கு
வரலாம்.இவர்களின் வாதங்களை பொய் என நிறுபிப்பதற்கும் இஸ்லாம்தான்
ஊண்மையான சத்திய மார்க்கம் என்று நிறுபிப்பதற்கும் நாம் தயாராகவே
உள்ளோம்.எனவே இன்று நாம்
பெற்றிருக்கக்கூடிய வெற்றி இறைமார்க்கமாம் இஸ்லாத்திற்குக் கிடைத்த
மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றியை சக இஸ்லாமிய
வலைப்பதிவாளர்களிடமும்,
தமிழ் இஸ்லாமிய இணையங்களை நடத்தும் அத்தனை உள்ளங்களுக்கும்;,
உலக முஸ்லீம்களிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
இவர்கள் எழுத்துவிவாத அழைப்பிதல் என்று பதிந்தவற்றிற்கு இஸ்லாமிய
இணையப் பேரவையின் பதிலை கீழே பார்வையிடுங்கள். அவற்றை பதிவிறக்கம்
செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
|