|
அன்பிற்குரிய வாசகர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! சமத்துவ
சமுதாயம் படைத்த சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும்
நோக்கில் சில வன்முறை கும்பல்கள் வலைப்பூக்கள் மூலமும்,
இணையதளங்கள் வாயிலாகவும் இஸ்லாத்தைப் பற்றி பொய்ச்செய்திகளையும்,
அவதூறுகளையும் பரப்பிக்கொண்டிருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
இஸ்லாமிய வெறுப்பையும்,
முஸ்லிம்களுக்கு எதிரான துவேசத்தையும் மாற்றுமத நண்பர்களிடம்
விதைப்பதற்காக இவர்கள் செய்துகொண்டிருக்கும் விஷமத்தனங்களை சொல்லி
முடியாது. அந்த வரிசையில் கருணையின் சிகரமாம் நபிகள் நாயகம்
முஹம்மது (ஸல்) அவர்களை,
கற்பிணிப் பெண்ணை
கொலை செய்யச் சொன்னார்
என்று நாக்கூசாமல்
நரேந்திரமோடி பாணியில் அவதூறு பரப்பிய அபத்தக்கட்டுரை ஒன்றுக்கு
ஹெராயின் போதையே ஹிட்லரின் வாரிசே என்ற தலைப்பில் நமது இணையதளம்
மூலம் மறுப்பை வெளியிட்டோம். அந்த மறுப்புக்கட்டுரைக்கு
பதிலளித்துவிட்டதாக எண்ணிக்கொண்டு உண்மையடியான் என்ற வலைப்பூ
நடத்துபவர்கள் சம்மந்தமில்லாமல் சில வரிகளை பதிந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இஸ்லாத்தின் உண்மை நிலையை உணர்த்தவும்,
சத்தியத்தை அந்த அன்பர்களும் புரிந்து கொள்வதற்கும் மற்றொரு
முயற்சியாக உண்மையடியான் வலைப்பூவினருக்கு இந்த பகிரங்க விவாத
அறைகூவல் விடப்படுகிறது.
இந்த அறைகூவல் கூலிக்கு மாறடிக்கும்
வாடிகன் புகழ் மட்டிபுல் பிளாக்ஸ் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல்,
இஸ்லாத்தை கொச்சைப் படுத்தும்
பிற
கிருத்துவ இணையதளங்களுக்கும்,
ஓசியில் பிலாக்ஸ் கிடைத்துள்ளதற்காக கண்டதை எல்லாம் கிறுக்கும்
நம்ம ஊரு அண்ணாச்சிகளான நாசமாய்போன கொமரன்களுக்கும்,
நமது இணையதளத்தை தாக்கி அழித்திடும் நோக்கில்
3
மாதங்களுக்கு முன்னர் ஒன்றரைலட்சம் ஹிட்ஸ் அடித்து வெறுத்துப் போன
தீவிரவாதிகளுக்கும் பொருந்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உண்மையடியான் பிலாக்ஸ்பாட்டிற்கு நாம் அனுப்பியுள்ள விவாத
அழைப்புக் கடிதம் இஸ்லாமிய இணையப் பேரவையின் வாசகர்களாகிய உங்களின்
பார்வைக்காக இங்கு வெளியிடப்படுகிறது. மடலை பதிவிறக்கம் செய்ய
இங்கே சொடுக்கவும்.
|