அறிமுகம்

   திருக்குர்ஆன்
   நபிமொழி
   Dr.ஜாகிர்நாயக்
   ஹாரூன் யஹ்யா
   தொடர்பு கொள்ள
   பதிவேடு
 
 
 
   பிற இணையதளங்கள்
   இதுதான் இஸ்லாம்
   சத்திய மார்க்கம்
   ரீட் இஸ்லாம்
   தமிழில் குர்ஆன்
   குர்ஆன் மென்பொருள்
   இஸ்லாம் கல்வி
   இஸ்லாமிய தஃவா
   A1 ரியலிஸம்
   ஒற்றுமை
   ஆன்லைன் பீஜே
   தமுமுக
   முஸ்லிம் மீடியா
   J A Q H
   அந்நஜாத்
    சமரசம்
 

வலைப்பூக்கள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Home   

இஸ்லாமிய இணையப் பேரவை ஏன்? எதற்கு?          

 அளவில்லா அருளும் நிகரில்லா கிருபையும் உடைய இறைவனின் திருப்பெயரால்...

சாந்தியும் சமாதானமும் உலகத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள் வழி நெறி பிறலாது தொடர்ந்தோர் மீதும் அந்த ஓரிறையின் பேரருள் என்றும் பொழியட்டுமாக! 

            இவ்வுலகம் வேகமாக இயங்குகிறது கணிணி மையத்தில்!

            இஸ்லாமிய சகோதரர்கள் இன்னுமிருக்கிறார்கள் அறியாமை கோழத்தில்!!

            அகிலனைத்தில் இருக்கும் அன்புச் சகோதரர்களே கண் விழியுங்கள்!!!

            நாங்கள் சொல்வதை சிறிது செவிசாய்த்து கேளுங்கள் 

            இஸ்லாம் இருள் மையமாக்கப்படுகிறது இணையதளத்தில்

            இன்னுமா உறக்கம்? சகோதரா  எழுந்து வா இறைபயணத்தில் 

        இஸ்லாத்தை சிந்தனை ரீதியில் தாக்குதலை தொடுக்கிறது பாசிச சக்திகளின் பாசறை

            இதற்காக அறிவுபூர்வமாக விடை கொடுத்திட உதயமாகிறது இஸ்லாமிய இணையப் பேரவை

மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். - இது திருமறையின் போதனை

தீமையை தடுக்கக்கூடிய சக்தியிருந்தும் அதை தடுக்காமல் இருந்தால் அதற்கான பாவம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

என்று மார்க்கம் சொல்வதற்கினங்க இதை தாரகமந்திரமாக எடுத்துக்கொண்டு இணையதளத்தில் இஸ்லாத்திற்கு எதிரான  நச்சு கருத்துக்களுக்கு சத்தியத்தை சாதூர்யமாக எடுத்துக்கூறவும் அறிவுபூர்வமாக விடை கொடுக்கவும் உதயமாகிறது நம் இஸ்லாமிய இணையப் பேரவை.

மார்க்கத்தை மாசுபடுத்த முயலும் இணையங்கள் பல. தங்கள் சிந்தனைக்கு தருகிறோம் அதிலே சில

அசத்தியத்தில் இருப்போரோ அணி திரண்டு ஒன்றாகிவிட்டனர்.

சத்தியத்தில் இருப்போரோ சண்டையிட்டு பிரிந்துகிடக்கின்றனர்.

அப்போது ஆங்கிலத்தில் தான் தாக்குதலைத் தொடுத்தார்கள் அந்த ஆதிக்கச்சக்திகள்.

தற்போது தமிழிலும் தாக்க வந்துவிட்டார்கள் இந்த தறுதலைகள்.

குர்ஆனிய வசனங்களை குளறுபடியாக்கி குற்றம் புரிகின்றனர்.

நபிமொழிகளை நாசவேளை செய்து நக்கல் செய்கின்றனர்.

ஜிகாத் வசனங்களை தவறாக சித்தரித்து தவகல் தருகின்றனர்.

தற்காப்புக்கு செய்த போர்களை தவறாக விளக்கம் கொடுக்கிறார்கள் இந்த தன்னறிவில்லாதவர்கள்.

பாகப்பிரிவினையை பலவாராக பிரித்து இஸ்லாத்தில் ஆனாதிக்கம் என்று தூற்றப்படுகிறது.

மார்க்கம் வாய்மையால் வளர்க்கப்பட்டதல்ல அது வாளால் பரப்பப்பட்டது என்று விதண்டாவாதம் புரிகின்றனர்.

நபியவர்களின் பலதாரமணத்தை பழித்துபேசி தவறான பட்டம் கொடுக்கப்படுகிறது. அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் இளவயது திருமணத்தை இழிவாக பேசப்படுகிறது.

பல புனைப்பெயர்களால் முஸ்லிம் பெயர் வடிவம் கொடுத்து சில கட்டுரைகள் காட்டப்படுகிறது. அதற்கு நான் ஏன் இஸ்லாத்தைவிட்டு வெளியேறினேன் என்று சுயவிளக்கமும் கொடுக்கப்படுகிறது

முஸ்லிம் குடும்பங்களில் தகாத உறவு நடப்பதுபோன்று கதைகள் வடிக்கப்படுகிறது. அதை சில இளம்வயது முஸ்லிம் சகோதிரி எழுதுவது போன்றும் சித்தரிக்கப்படுகிறது.

அழைப்புப்பணியில் அன்றாடம் தங்களை அறவழியில் அற்பணித்து கொண்டியிருக்கிறார்கள் நம் இந்திய திருநாட்டில் பலர்.

அப்பணியை அமுக்கிட அதை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி உளவுதுறைக்கு கொடுக்கின்றனர் சில தவறான தகவல்களை பாசிசத்தின் சிலர்

இறைச்சட்டங்களை இழிநிலை ஏற்படுத்தி ஏளனம் புரிகின்றனர் இணையதளத்தில்

நபியவர்களுக்கு உருவம்கொடுத்து  கற்பணை செய்கின்றனர் காமக்கண்ணோட்டத்தில்

 

உன் கண்ணுக்கு முன்னால் தீமை நடந்தால் என்ன செய்ய சொல்கிறது நபிமொழி?

ஆனால் நாம் அதை சிறிதும் கண்டும்காணாமல் இருக்கிறோம் தொழிலே, வீடே கதி!

இஸ்லாத்திற்கு இணையதளத்தில் களங்கம் ஏற்படுகிறது பல பாசிச சக்திகளால்

இஸ்லாமிய சகோதரர்களோ இணையாமலிருக்கிறார்கள் சில இயக்க தயக்கங்களால்

இஸ்லாத்தை இணையத்தில் தேடும்போது பாசிசத்தின் பக்கங்களே முதலில் வருகிறது

நாளைய தலைமுறைக்கு இணையத்தால் இஸ்லாம் தவறான முறையில் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது

இறைவன் அமானத்தாக கொடுக்கின்ற குழந்தைகளுக்கு இஸ்லாத்தை தூய வடிவில் கொடுப்பது நமது கடமையாக இருக்கிறது

முஸ்லீம்களால் இப்பேரவை நிறுவுவதற்கு இத்தீயசக்திகளால் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

            நிச்சயமாக புகழனைத்தும் இறைவனுக்கு

            நல்லாதரவு நல்குவீர் இந்த இஸ்லாமிய இணையப் பேரவைக்கு

            யா இறைவா! தூய எண்ணம் தந்து வெற்றியை கொடுப்பாயாக எமது முயற்சிக்கு.

 

 

Copy Right © 2007- Islamiya Inayap Peravai. All Rights Reserved