இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களை பொய்யன் என்று தலைப்பிட்டு சில புல்லுரிவிகள் அபத்தங்களை அள்ளி வீசியுள்ளனர். நரகத்தின் வாயிலை திறந்துவிட்டுள்ள இவர்களின் பொய்களுக்கான நமது இணையப்பேரவையின் பதில்களை நீங்கள் பார்வையிடுகிறீர்கள்.

அறிமுகம்

   திருக்குர்ஆன்
   நபிமொழி
   Dr.ஜாகிர்நாயக்
   ஹாரூன் யஹ்யா
   தொடர்பு கொள்ள
   பதிவேடு
 
 
 
   பிற இணையதளங்கள்
   இதுதான் இஸ்லாம்
   சத்திய மார்க்கம்
   ரீட் இஸ்லாம்
   தமிழில் குர்ஆன்
   குர்ஆன் மென்பொருள்
   இஸ்லாம் கல்வி
   இஸ்லாமிய தஃவா
   A1 ரியலிஸம்
   ஒற்றுமை
   ஆன்லைன் பீஜே
   தமுமுக
   முஸ்லிம் மீடியா
   J A Q H
   அந்நஜாத்
    சமரசம்
 

வலைப்பூக்கள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Home     

பாகம் : 4/5

அபத்தங்களும் அவதூறுகளும் ஆதாரமாகுமா?

மனித இனம் போற்றும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை தரக்குரைவான வார்த்தைகளாலும், ஒருமை நடையிலும் இவர்கள் தூற்றி பதிவு செய்துள்ளனர். மனிதத் தன்மையற்ற இவர்களிடம் கீழ்த்தரமான இந்நரகல்களைத் தவிர வேறு எவற்றை நாம் எதிர்பார்க்க முடியும்? எனவே அவர்கள் பலமான ஆதாரங்களாக நினைத்து பதிந்த அவதூறுகளையும் பொய்களையும் பதிலளிக்க வேண்டி நாமும் அப்படியே இங்கு பதிக்கிறோம். இப்பதிலைப் படிப்பவர்கள் 'முஹம்மது' என்று இருப்பவைகளையும், ஒருமையில் உள்ள வாசகங்களையும் 'அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்' என்று திருத்திப் படித்துக் கொள்ளவும். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை ஆய்வு செய்கிறேன் பேர்வழி என்று கிளம்பியுள்ள இவர்கள் தரும் வேடிக்கையான ஆதாரங்களைப் பாருங்கள்.

mgj;jk; : 1 // முகம்மது ஒரு பொய்யன், கடவுளுக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அல்லாவின் தூதரும் இல்லை, ஒன்றும் இல்லை, அவனிடம் கடவுள் எதையும் சொல்லவில்லை. அவன் தொடர்ந்து ரீல் விட்டு, மக்களை பயமுறுத்தி ஏமாற்றி தனது கல்ட்டை நிர்மாணம் செய்தான் என்பதற்கான சாட்சிகள் ஏராளம். அவற்றில் சிலவற்றையே முந்தைய பதிவுகளில் பதிந்திருந்தேன். இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் அரேபியாவில் மலிந்து கிடந்தார்கள். இப்படிப்பட்ட பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றிய குறிப்புகள் ஹதீஸ்களிலேயே நிறைய இருக்கின்றன. அந்த பொய் தீர்க்கதரிசிகளோடு போட்டி போட்டு தன்னுடைய மதத்தை ஸ்தாபிக்க அலைந்த இன்னொரு பொய் தீர்க்கதரிசிதான் முகம்மது. //

இவர்கள் எந்த லட்சனத்தில் ஆதாரத்தை தந்திருக்கின்றனர் என்பதைப் பாருங்கள். இதில் நபி (ஸல்) அவர்கள் பொய்யர் என்பதற்கான 'சாட்சிகளை முந்திய பதிவுகளில் பதிந்திருக்கிறேன்' என்று புண்ணாக்குத்தனமான பீடிகை வேறு. இவர்களின் சாட்சிகள் எந்த அளவிற்கு கேவலமாக இருக்கும் என்பதற்கு இந்த ஆக்கம் ஒன்றே போதாதா? முஹம்மது ஒரு பொய்யன் என்ற தலைப்பிட்டு வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியவர்கள் தங்களின் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த ஆக்கத்தில் அல்லவா பதிந்திருக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறையளித்த தூதுச் செய்தியே திருக்குர்ஆன். அவர்களின் சொல் செயல் அங்கீகாரத்தை முஸ்லீம்களாகிய நாம் ஹதீஸ் என்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பொய்ப்படுத்த வந்தவர்கள் 'பொய் தீர்க்கதரிசிகளைப் பற்றிய குறிப்புகள் ஹதீஸ்களிலேயே நிறைய இருக்கின்றன' என்று எழுதுவதற்கு இவர்களுக்கு வெட்கமாக இல்லையா? ஒருவரை பொய்யர் என்று சொன்னால் அவர் பொய் சொல்ல வேண்டும். நபிகளாரையே பொய்யர் என்று சொல்லிவிட்ட பின்னர் அவர்கள் சொன்ன ஹதீஸ்கள் மட்டும் இவர்களுக்கு எப்படி உண்மையான ஆதாரமாகும். இந்த ஞான சூனியங்களின் முரண்பாடிற்கு ஒரு வரையரையே இல்லையா? இவர்கள் இவ்வாறு விடும் ரீல்கள் பல கிலோமீட்டர்களைத் தாண்டும் நண்பர்களே.

mgj;jk; : 2  //தன்னுடைய ரீல் சுற்றல்களுக்கு மற்றவர்கள் பயப்பட வேண்டும், அவர்களை பயமுறுத்தி தன்னுடைய மதத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இல்லாத ரீல்களை சுற்றியிருக்கிறான். இதனை அந்த காலத்திலிருந்தவர்கள் எதிர்த்தபோதும், இவனது முட்டாள்தனங்களையும், இவன் பின்னால் செல்பவர்களின் முட்டாள்தனங்களையும் கிண்டல் செய்தவர்களை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள் இவனும் இவனது கூலிப்படையும். //

'இவர்களைப் பின்பற்றாதவர்களை கொலை செய்திருக்கிறார்கள்' என்று எழுதிவிட்டு, எழுதிய எழுத்தின் மையின் ஈரம் காயுமுன்பே அவர்களே முரண்படுவதை கீழுள்ள இவர்களின் மூன்றாவது அபத்தத்திலிருந்தே காணுங்கள். 'மக்கா பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முஹம்மது' என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதைப் பாருங்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னைப் பின்பற்றாதவரையும், கிண்டல் செய்தவர்களையும் கொலை செய்திருக்கின்றார் என்றால், அதிலும் கூலிப்படையை வைத்து கொலை செய்திருக்கிறார் என்பது உண்மையானால், அந்த அளவிற்கு வலிமையான ஒருவர் தான் பிறந்த மண்ணிலிருந்து மதினாவிற்கு ஏன் நாடுதுறக்க வேண்டும்? தன்னை கிண்டல் பண்ணுவதையே பொறுக்காமல் கொலை செய்யும் கோபக்கார வலிமையாளர், தான் பிறந்து வளர்ந்த  ஊரை விட்டே தன்னை விரட்டுபவர்களை கண்டந்துண்டமாக அல்லவா வெட்டி வீழ்த்துவார்? சிந்திக்க வேண்டாமா? இதற்குதான் நாம் இவர்களை ஞான சூனியங்கள் என்று எழுதியிருக்கிறோம்.

இப்படி எழுதுவது இவர்களுக்கு முரண்பாடாகத் தெரியாது. காரணம் இவர்கள் சுற்றுவது ரீல் என்பதை இவர்கள் அறிந்தே எழுதியுள்ளனர். இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு என்றால் ஒரு பத்து பதினைந்து பக்கங்களையாவது நிரப்பவேண்டும் என்ற முடிவில் இக்காகிதப் புலிகள் தங்கள் அபத்தங்களால் சில பக்கங்களை நிரப்பியிருக்கிறார்கள் என்பதே உண்மை.

mgj;jk; : 3  // கதீஜா இறந்ததும், இவன் செய்யும் அட்டூழியங்களால் மெக்கா பகுதியிலிருந்து விரட்டப்பட்ட முகம்மது, மெதீனாவுக்கு சென்று அங்கிருக்கும் அன்சார் என்ற ஜாதியின் துணையுடன் வியாபார காரவான்களை கொள்ளையடித்து பங்கு போட்டு வாழ்க்கை நடத்தியிருக்கிறான். இந்த கொள்ளையில் பணம் சேர சேர அந்த பணத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய ஆள் பலத்தை அதிகரித்திருக்கிறான். தன்னை எதிர்த்தவர்களை தீர்த்துககட்டுவதன் மூலம் தனக்கு எதிர்ப்பு இல்லாமல் செய்து கொண்ட இவன், நல்ல ஆள் பலம் சேர்ந்ததும், மெக்காவை ஆக்கிரமித்து தன்னை முன்பு அவமரியாதை செய்தவர்களை எல்லாம் தீர்த்துக்கட்டினான். //

கைபர் போயன் கனவாயிலிருந்து இந்தியத் திருநாட்டிற்குள் ஊடுருவிய இப்பார்ப்பனத் துரோகிகள், தேச விடுதலைக்காக தியாகங்கள் பல செய்த நம் முன்னோர்களை தனது சுகபோக வாழ்விற்காக வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்தனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ் என்று பரிணாம வளர்ச்சி பெற்று காந்தியையும் சுட்டுக் கொண்டது இக்கோட்சே கும்பல். காந்தியடிகள் இறந்ததும் தங்கள் அட்டூழியங்களை வெளிப்படையாகவே காட்டலாயினர். பாகிஸ்தான் அகதியான வந்தேரி அத்வானி போன்ற கயவர்கள் துணையுடன் இந்திய அரசியலிலும் கால் பதித்தனர். இந்திய தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈய்ந்த வாரிசுகளான இந்திய முஸ்லீம்களை பாகல்பூர், மீரட், மொராதாபாத், குஜ்ராத் என்று படுகொலை செய்து கொண்டேயிருக்கின்றனர். முஸ்லீம்கள் வாழும் ஊர்களில் கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லீம்களின் வணிக நிறுவனங்களையும் பொருளாதாரத்தையும் கொள்ளையடிக்கின்றனர். இப்படி கொள்ளை பணங்கள் சேர சேர தங்கள் ஆள்பலத்தை அதிகரிப்பதற்காக வறுமையில் வாடும் தலித் மக்களையும், கீழ் ஜாதியினரையும் பணங்களைக் கொடுத்து மூலைச்சலவை செய்து முஸ்லீம்களுக்கும் நடுநிலையாளர்களுக்கும் எதிராக அவர்களைத் திருப்புகின்றனர்.

அன்று வெள்ளையர்களுக்கு கூலிப்படையாக இருந்தது முதல், என்றும் பிறநாட்டு ரகசியக் கூலிக்காக இந்தியத் திருநாட்டின் ராணுவ இரகசியங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது உட்பட, கூலிப்படைகளை வைத்து முஸ்லீம்களை கொலை செய்வது வரை கைதேர்ந்த வல்லுனர்களாக இருக்கும் இப்பார்பன ஆர் எஸ் எஸ் கும்பலுக்கு நிகர் அவர்களே. இக்கொலைகாரக் கும்பலின் வாரிசுகள் தங்களின் இனத்தவர்களைப் போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு வரலாற்றில் முத்திரை பதித்த வித்தகரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், அவர்களின் உத்தமத் தோழர்களையும் கொலைகாரர்களாகவும், கொள்ளைக் காரர்களாகவும், கூலிப்படைகளாகவும் மேற்கண்டவாறு சித்தரித்துள்ளனர். மற்றபடி அதில் பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இவர்கள் இட்ட தலைப்பிற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத மேற்கண்ட இவர்களின் அபத்தங்களை பார்வையிடும் ஒவ்வொருவரும் இப்பார்ப்பன பனியாக் கும்பலின் அபாய முகத்திரைகளை கிழித்தெரியும் எமது பதில்களை, இந்திய தேச விடுதலையில் இவர்களின் துரோக வரலாற்றை தமிழ் உலகிற்கு எடுத்துச்சொல்வது தார்மீகக் கடமையாகும்.

mgj;jk; : 4  // இவன் கதீஜா என்ற பணக்கார விதவையை கல்யாணம் பண்ணி அவளுடைய பிரதிநிதியாக பல இடங்களில் சென்று வேலை செய்திருக்கிறான். எழுதப்படிக்கத்தெரியாத ஒரு முட்டாளிடம் ஒரு பணக்கார வியாபாரி தன் வேலைகள் அனைத்தையும் ஒப்படைப்பாரா? //

உலக மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பலசரக்கு வணிகம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை என்பது இன்றியமையாதது. இந்திய மக்கள் தொகையில் குறைந்தது ஒரு சதவிகிதம் பேர் இது போன்ற வியாபாரம் செய்து பிழைக்கின்றனர் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவர்கள் கூறுவது போல இந்த ஒரு கோடி மக்களும் தாங்கள் வணிகம் செய்து பிழைப்பதற்காக எம்.காம் எம்பில். பிஹெச்டி போன்ற பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை எல்லாம் முடித்துவிட்டுதான் வியாபாரம் செய்கிறார்களா?

ஏதோ அன்னை கதிஜா (ரழி) அவர்கள் ஒரு மல்டிநேஷனல் கம்பெனியை நடத்தியது போலவும், உலக பங்குச் சந்தை வணிகத்தையே அவர்கள் கையில் வைத்திருந்தது போலவும் அவ்வணிகத்திற்கு ஒட்டுமொத்த சேர்மனாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நியமித்தது போன்றும் மெண்டல்தனமாக ஒரு பிரம்மையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற பொய்யர்கள் பெருகியுள்ள இன்றைய நவீன உலகில் வியாபாரம் செய்யும் வியாபரிகளுக்காவது தனது வணிகத்தில் அதிகக் கவனமும், கணித அறிவும் அவசியம். வெறும் கோதுமை, பேரீத்தம்  மற்றும் ஆலிவ் பழங்கள் என விரல்விட்டு எண்ணும் அளவிற்குள்ள பொருட்களையே தங்களின் உணவாக உட்கொண்ட அம்மக்களிடம் அப்பொருளை வணிகம் செய்வதற்கு என்ன பெரிய படிப்பறிவு தேவை?

ஒரு வாதத்திற்காக கல்வியறிவு அவசியம் என்று வைத்துக்கொண்டாலும் இதில் முஹம்மது பொய்யர் என்பதற்கு இவர்களுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? இவர்களின் வாதத்தின்படி முஹம்மது மிகப்பெரிய அறிவாளி என்று மக்கள் புரிந்து கொள்வர். எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லம் அறிவில்லாதவர்கள் முட்டாள்கள் என்று வாதம் வைத்துள்ளனர். எழுதப்படிக்கத் தெரிந்த இவர்கள் மட்டும் பெரிய அறிவாளியாகவா இருக்கின்றனர்? எழுதப்படிக்கத் தெரிந்தவர்களிலும் முட்டாள்கள் இருக்கின்றனர் என்பதற்கு இவர்களே நமக்கு சாட்சியாக இல்லையா?

mgj;jk; : 5 //  இந்த பூலோகத்தில் முதலில் பயங்கரவாதம் மூலமாக பயத்தை உருவாக்க வேண்டும். பங்களாதேஷில் நாடெங்கும் ஒரே நேரத்தில் 400 குண்டுகள் வெடித்திருக்கின்றன. இப்படிப்பட்ட பயங்கரவாதம் அல்லாவின் ஷாரியா சட்டத்தை பங்களாதேஷில் கொண்டுவருவதற்காக செய்யப்படுகிறதாம்! இத்தனைக்கும் பங்களாதேஷ் முஸ்லீம் பெரும்பான்மை நாடு! அப்படி பயங்கரவாதத்தின் மூலமாக ஆள் சேர்த்த பின்னால், அவர்களிடம் செத்த பின்னால் நெருப்பில் போட்டு வாட்டுவேன், எண்ணெயில் போட்டு வறுப்பேன் என்று பயமுறுத்த வேண்டும். இதுபோல பயத்தின் அடிப்படையில் உருவாக்கிய கல்ட்தான் இந்த இஸ்லாம். //

இவர்கள் உண்மையிலேயே சுய நினைவோடுதான் எழுதியிருக்கின்றனரா அல்லது சாராயத்தை குடித்துவிட்டு குடிபோதையில் எழுதியுள்ளார்களா? என்ற சந்தேகம் நமக்கு வருகிறது.  பங்களாதேசில் 400 குண்டு வெடித்ததற்கும் முஹம்மது ஒரு பொய்யன் என்று இவர்கள் சொல்வதற்கும் என்ன ஆதாரம் உள்ளது? நம் அண்டை நாடான இலங்கையில் அனுதினம் சரவெடிபோன்ற துப்பாக்கிச் சப்தங்களும் மனித குண்டு வெடிப்புகளும் நடந்து கொண்டிருக்கிறதே அது எந்த அல்லாஹ்வின் எந்த சரீயத் சட்டத்தை நடைமுறைப்படுத்த? இவ்வாறு இருபது வருடங்களுக்கும் மேல் பங்களாதேசை விட பன்மடங்கு அளவில் இலங்கையில் நடக்கும் தொடர் குண்டு வெடிப்பிற்கு ராமர் பால போர்ஜரிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளை ஆக்கிரமித்துள்ள போர் வெறியர்கள் அங்குள்ள பச்சிளம் குழந்தைகள் முதல் பெண்கள் முதியவர்கள் என்று எவரையும் விட்டுவைக்காமல் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களின் முன்னோடிகளான அந்த யூத அமெரிக்க போர் வெறியர்கள் இவ்வுலகை ஏமாற்றி நித்தமும் அங்கு நடத்தும் குண்டு வெடிப்புகளையும் இவர்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டால் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும். பின்னர் 'முஹம்மது ஒரு மகா பொய்யர்' என்று தலைப்பிட்டு அதை இவர்கள் பெரிய ஆதாரமாக வெளியிடலாம். பிறகு தமிழகத்தில் பத்திரிக்கைத் துறையில் பயங்கரவாதத்தை செவ்வனே நடத்திவரும் அவ்வாள்களான தினமலத்திற்கும் அனுப்பி வைக்கலாம். அந்த நரகல் நகல் ஒன்றை தமிழ் மக்களிடம் பல ஆண்டுகளாக விஷவித்தை விதைத்துக் கொண்டிருக்கும் பிரபல சைனைடு வியாபாரியும் பயங்கரவாதியுமான துக்ளக் சோவிற்கும் மறக்காமல் அனுப்பி வைக்கட்டும். 'உதிர்ந்த முத்து' என்று தலைப்பிட்டு அவர் வெளியிடுவார், மிகவும் சிறப்பாக இருக்கும்.

இப்படித்தான் அவர்களின் ஆக்கம் முழுவதும் தான் தேர்ந்தெடுத்த தலைப்பிற்கு கொஞ்சம் கூட சம்மந்தம் இல்லாமல் பொய்களை கொட்டி தீர்த்திருக்கின்றனர். எனவே அவர்களின் அண்டப்புளுகுகளை, ஆகாசப்புளுகுகளை அலட்சியம் செய்து இக்கட்டுரையின் முடிவிற்கு வருகிறோம்.

சாட்டையடிகள் மேலும்  தொடரும் இன்ஷா அல்லாஹ்...

 

 

 

Copy Right © 2007- Islamiya Inayap Peravai. All Rights Reserved