|
கிருஸ்தவமே
பொய் இதில் உண்மையடியான் எங்கே?
|
 |
|
அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட
நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ்
தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். (அல்குர்ஆன் 61 : 8) |
இவ்வுலம் தோன்றியது முதல் மனித
சமூகத்திற்கு நல்வழிகாட்டுவதற்காக வல்ல அல்லாஹ்
மனிதர்களிலிருந்தே தன் தூதர்களை தேர்ந்தெடுத்தான். தன்
புறத்திலிருந்து போதனைகளையும், கட்டளைகளையும் வேதமாக அவ்வப்போது
அத்தூதர்களின் மூலம் மனித சமூகத்திற்கு அளித்தான். எனினும்
நன்றிகெட்ட மனிதர்கள் சிலர் ஒவ்வொரு காலத்திலும் அத்தூதர்களை
நிராகரித்து இறைவன் வழங்கிய அத்தூதுச்செய்தியை பொய்யாக்க
முற்பட்டனர். இன்னும் பலர் இறைவேதங்களில் தங்கள் சுய கற்பனைகளை
கலப்படம் செய்து மாசுபடுத்தினர், இதற்கும் ஒருபடி மேல் சென்று
அத்தூதர்களை கொலை செய்யவும் முற்பட்டனர். இறைவனோடு விளையாடி
இறைசாபத்திற்குள்ளான அத்துர்பாக்கிய சாலிகள் இறுதியில்
இழிநிலையில் அழிந்தே போயினர். இதைத்தான் திருமறைவசனம் இவ்வாறு
கூறுகிறது.
உங்களுக்கு முன் பல வழிமுறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள்
பூமியில் சுற்றி வந்து இறை வசனங்களைப் பொய்யாக்கியோரின் முடிவு
என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
(அல்குர்ஆன் 3 : 137) (மேலும்
பார்க்க
3:137, 6:11, 7:84, 10:39, 10:73, 16:36,
27:51, 30:42, 43:25)
இவ்வரிசையில் இறைவனால்
பாதுகாக்கப்பட்ட இறுதிவேதமாம் குர்ஆனையும், இறுதி இறைத்தூதர் நபி
முஹம்மது (ஸல்) அவர்களையும் நிராகரித்து, இறைமார்க்கமாம்
இஸ்லாத்தின் மீது புழுதிவாரி இறைக்கும் திருப்பணியை(?)
செய்வதற்கு
சமீபநாட்களாக உண்மையடியான் என்ற இழிபிறவி கிளம்பியுள்ளார்.
ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இவரையும், இவரது கூட்டாளிகளையும்
நரகத்திலிருந்து மீட்டெடுக்கும் கடைசி முயற்சியாக நமது இஸ்லாமிய
இணையப் பேரவை இவரது சொத்தை வாதங்களிலுள்ள அபத்தங்களையும்,
பொய்களையும், அவரது அறியாமையையும் பல ஆக்கங்கள் மூலம் தெளிவாக
விளக்கியது. சுயநினைவோடும், இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்ற
எண்ணத்திலும் அவர் இருந்திருந்தால் நமது விளக்கங்கள் அவருக்கு
பயனளித்திருக்கும். ஆனால் அவரது நோக்கம் அதுவல்லவே!.
இவரது பித்தலாட்டங்கள் எல்லை
மீறவே, நமது பேரவை இவருக்கு பகிரங்க விவாத அரைகூவலை விடுத்தது
(பார்க்க இங்கே சொடுக்கவும்).
நமது விவாத அழைப்பை கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடி
ஒளிந்த இந்த பொய்யடியான், 'எனக்கு
அறிவில்லை என்னை விவாதத்திற்கெல்லாம் அழைக்காதீர்கள்'
என்று நம்மிடம் மண்டியிட்டு மடிபிச்சை கேட்டதையும் கண்டு
இவ்வுலகமே சிரித்தது
(பார்க்க இங்கே சொடுக்கவும்).
இதைத்தான் வல்ல அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனங்களில் இவ்வாறு தெளிவு
படுத்துகிறான்.
எவன்
இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்ட நிலையில், அல்லாஹ்வின் மீது
பொய்யை இட்டுக் கட்டுகிறானோ அவனைவிட அநியாயக்காரன் யார்?
அன்றியும், அநியாயக்கார சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த
மாட்டான்.
அவர்கள்
அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு ஊதி அணைத்து விட
நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன்
ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.
இணைவைத்து வணங்கும் முஷ்ரிக்குகள் வெறுத்த
போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு,
அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும்
அனுப்பினான். (அல்குர்ஆன்
61 : 7-9.)
அல்லாஹ்விற்கு இணைவைக்கும் இந்த
அநியாயக்காரர்கள் வெறுத்தபோதிலும் இஸ்லாம் என்ற இந்த பூரணஜோதியை
வல்ல அல்லாஹ் சுடர்விடும் பிரசாகமாக மென்மேலும் மின்னச்செய்து
கொண்டே இருக்கிறான்-அல்ஹம்துலில்லாஹ்
ஷைத்தானின் நேரடி ஏஜென்டான இப்பொய்யடியான் இஸ்லாத்தின் மீது
சமீபத்தில் 3 பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவைகளாவன:
//
1).
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம். இதற்கு நபி (ஸல்) அவர்களின்
கடிதங்களே சாட்சி.
2).
குர்ஆன் ஒன்றல்ல, பல குர்ஆன்கள் உள்ளன. ஓவ்வொன்றும் பல
ஓசைகளையும், எழுத்துக்களையும் கொண்டவை. எனவே ஒரே கருத்தில்
அமைந்த குர்ஆன் என்று இல்லை.
3).குர்ஆனும்,
ஹதீஸூம் ஏசுவை கடவுள் என்று சொல்கிறது.//
என்ன சிரிப்பு வருகிறதா? மேற்கண்ட
இவரது பதிவை படிக்கும் எவரும், இவர் ஒன்று மனநோயாளியாக
இருக்கவேண்டும் அல்லது டாஸ்மார்க் கடையில் அமர்ந்து சரக்கு
அடித்து விட்டு இப்படி எழுதியிருக்கவேண்டும் என்ற
முடிவிற்குத்தான் வருவார்கள். இஸ்லாத்தைப் பற்றியோ, கிருஸ்தவம்
உட்பட பிறமதங்களைப் பற்றியோ சற்றும் அறிவில்லாதவர் என்பதை தனது
எழுத்துக்களின் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்துபவர்தான் இந்த
உண்மையடியான். திருமறை குர்ஆனின் மற்றும் ஸஹீஹூல் புஹாரியின்
ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய
ஆராய்ச்சியாளராக தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட
மார்க்கம் என்று புனைவதற்கு அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் பல
பில்லியன் கணக்கில் டாலர்களை கொட்டிக் குவித்து பொய்ப்பிரச்சாரம்
செய்து பார்த்தது. ஆனால் அதில் கடும் தோல்வி கண்டு, இன்று
அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவரும் மார்க்கம் இஸ்லாம் என்ற
நிலைக்கு அந்நாடு தள்ளப்பட்டுள்ளது. டாஸ்மார்க் பொய்யடியானைப்
பார்த்து நாம் கேட்கிறோம், அமெரிக்கா என்ற வல்லரசாலேயே
இப்பொய்பிரச்சாரத்தில் வெற்றி காண முடியவில்லையே, இந்நிலையில்
4
வலைப்பூக்களை வைத்துக்கொண்டு இப்பொய்
பிரச்சாரத்தில் இவரால் வெற்றி பெறஇயலுமா? இவர் நிற்கமுடியுமா?.
இவ்வாறு என்னதான் கூப்பாடு போட்டாலும் இஸ்லாம் வாளால்
பரப்பப்பட்டது என்பதை இவரால் நிரூபிக்கத்தான் முடியுமா?.
இன்று உலக
நாடுகளில் அதிக முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கொண்ட நாடு
இந்தோனேஷியா. இந்தோனேஷியாவிற்கு எந்த முஸ்லிம்
படைத்தளபதி எந்த
வாளைத்தூக்கிக் கொண்டு சென்றார்?
மலேசியாவில் முஸ்லிம்கள்
கணிசமாக உள்ளனரே அங்கு யார் படையெடுத்தார்?.
சரி இன்று
அமெரிக்காவிலும், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய
நாடுகளிலும் இஸ்லாம் வேகமாகப் பரவிவருகிறதே இங்கு எந்த இஸ்லாமியப்
படை சென்றுள்ளது? எந்த நபி அந்நாட்டின் தலைவர்களுக்குக் கடிதம்
எழுதினார்?
இப்படி எல்லாம் பல கேள்விகளை நாம் அடிக்கிக்கொண்டே
போகமுடியும். இதுபோன்ற கேள்விகளை சுயசிந்தனையும்,
பகுத்தறிவுமுள்ள மனிதர்களிடம் கேட்கலாம் ஆனால்
டாஸ்மார்க்
பொய்யடியான் இவ்வாறு கேட்பதில் பயன் ஏதுமுண்டா?
இவரது இரண்டாவது
குற்றச்சாட்டின் சாராம்சம்
'பல குர்ஆன்கள் உள்ளன, எனவே
குர்ஆன் பாதுகாக்கப் படவில்லை'
என்பதாகும். (இதற்கு சகோதர வலைப்பதிவுகளில் ஏற்கனவே பதில்
சொல்லப்பட்டுவிட்டது (பார்க்க :http://abumuhai.blogspot.com/2008/10/blog-post.html)
.
இது போன்ற கருத்துக்களைத்
தலைப்பாக வைத்துத்தானே விவாதிக்கத் தயாரா? என இவருக்கு விவாத
அழைப்பு விடுத்தோம். உண்மையிலேயே இவருக்கு வெட்கம், மானம்,
ரோஷம், சூடு, சொரணை இருந்திருந்திருந்தால் இவர் கூறியதைப் போன்று
குர்ஆனில் முரண்பாடுகள் உள்ளன என்று நம்முன் நிரூபிக்க
வந்திருக்க வேண்டுமல்லவா. மாறாக நம் விவாத அழைப்பைக் கண்டு இவர்
ஓடி ஒழிந்ததேன்?
நாமும் திருக்குர்ஆனின் தூய்மை
நிலையையும், முரண்பாடற்ற தன்மையையும் நிரூபிப்பது மட்டுமல்லாமல்
பைபிள் என்ற இவரது பரிசுத்த(?) வேத(காம)த்தின் லட்சனங்களை அந்த
அவையிலே போட்டு உடைப்பதாகவும் சவால்விட்டோமே. இப்போது மீண்டும்
குர்ஆன் சரியில்லை என்று இவர் எழுதிக் கொண்டு வருவது எதைக்
காட்டுகிறது? இதற்குத்தான் இவரை நாம் டாஸ்மார்க் பொய்யடியான்
என்று எழுதியுள்ளோம் சகோதரர்களே.
இவரது மூன்றாவது
குற்றச்சாட்டு : குர்ஆனும்,
ஹதீஸூம் ஏசுவை கடவுள் என்று சொல்கிறது என்பதாகும்.
புஹாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ள குழந்தைகளை ஷைத்தான்
தீண்டுவது தொடர்பாக வரும் ஹதீஸை வைத்துக்கொண்டு இவர் இவ்வாறு
புழுகியிருக்கிறார். இவர் காட்சித் தொகுப்பாக வெளியிட்டுள்ள அந்த
வீடியோ கிளிப்பிலேயே இவர் கூறுவதற்கு மாறான பொருள் உள்ளது.
இஸ்லாத்தை அகழ்வாராய்ச்சி செய்யக் கிளம்பியுள்ள இவரின்
அறியாமையைக் கண்டு நாம் அனுதாபப்படுகிறோம். உண்மையடியானுக்கு
அந்த பதிவை நீக்குவதற்கு அவகாசம் கொடுக்கிறோம். இல்லையெனில் நமது
அடுத்த பதிவு இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றியதுதான். நமது விவாத
அழைப்பிற்கு பதில் என்று போட்டு மூக்கறுபட்டதைப் போல இதிலும்
அவர் கடும் தோல்வியையும் இழிவையும் சந்திப்பார் என்பதை
முன்னறிவிப்பு செய்கிறோம். (அப்போதும் இவர் திருந்தி
விளங்கமாட்டார். இதை நம்முடைய அனுபவத்தில்தான் சொல்கிறோம்).
குறிப்பு:- உண்மையடியான் என்ற இந்த ஆசாமியின் எழுத்துக்களும், பொய்ப்
பிரச்சாரங்களும்; ஒட்டுமொத்த கிருஸ்தவர்களின் கருத்தல்ல. மேலும்
உண்மையடியான் என்ற இந்த ஆசாமியைப் பற்றி நாம் விசாரித்தவரையில்,
தமிழக கிருஸ்தவர்களின் மத்தில் இவருக்கு எவ்வித அங்கீகாரமுமில்லை
என்பதை அறிந்தோம். தமிழக கிருஸ்தவ சங்கங்களுக்கோ, இங்குள்ள
பேராயர்களுக்கோ சற்றும் அறிமுகமில்லாத முகவரியற்றவர்
உண்மையடியான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவேதான்
அறியாமையினால் இவர் உளரும் உளறல்களை நாம் பெரிய அளவிற்கு
பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வருகிறோம்.
மேலும், பன்முக
சமூகம் கொண்ட நம் நாட்டில், இந்து முஸ்லிம் கிருஸ்தவர்கள் என்று
ஒற்றுமை வாஞ்சையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்று ஒரிஸாவில்
கிறித்தவ சகோதரர் ஸ்டெய்ன்ஸ் அவர்கள் சங்பரிவார தீவிரவாதிகளால்
குடும்பத்தோடு எறிக்கப்பட்டபோதும், இன்று கிருஸ்தவ சகோதரர்கள்
பஜ்ரங்தள் பயங்கரவாதிகளால் பாதிப்படைகின்ற போதும், நம் முஸ்லிம்
சமூகம் கிருஸ்தவ நண்பர்களோடு தோளோடு தோள் நின்றிருக்கிறோம்.
பாதிப்புக்குள்ளாகும் அவர்களுக்காக அபயக் குரல் எழுப்புகிறோம்.
அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் கிருஸ்தவர்கள் தனி இடஒதுக்கீட்டை
பெற காரணமானவர்கள் முஸ்லீம்கள்தான் என்று வெளிப்படையாக பல
பேராயர்கள் பொது மேடைகளில் வைத்து நமக்கு நன்றி தெரிவிக்கும்
அளவிற்கு கிருஸ்தவர்களோடு நாம் நட்புறவு கொண்டிருக்கிறோம்
என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். காரணம் இஸ்லாம் என்ற அற்புத
மார்க்கம் முஸ்லிம்களை இந்த அளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளது.
உண்மையடியானின் தொடர் பொய்ப்பிரச்சாரங்களும், இஸ்லாத்திற்கொதிரான
புழுதிவாரி இறைக்கும் போக்கும் தமிழக முஸ்லிம் கிருஸ்தவ
ஒற்றுமையை எவ்வகையிலும் பாதிக்காது என்பதை விளங்கிக்கொள்வீர்.
தமிழக கிருஸ்தவர்களில் பலர், பல தெய்வக்கொள்கையான
இந்துமதத்திலிருந்து, முக்கடவுள் கொள்கையான கிருஸ்தவத்திற்கு
இனஇழிவு நீங்குமா என்று ஏங்கிச் சென்றவார்களே. ஆயினும், நாடார்
கிருஸ்துவர்கள், தலித் கிருஸ்துவர்கள் என்ற இனஇழிவை சுமந்தே
கிருஸ்துவர்களாக வாழ்கின்றனர். இவ்வுலகைப் படைத்த ஒரே இறைவனால்
வழங்கப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கை நெறியால் மட்டுமே இனஇழிவல்லாத
சமத்துவத்தைக் கொடுக்க முடியும், ஈடேற்றம் பெற இயலும். பரலோக
இராஜ்ஜியத்தில் வெற்றியடைய தங்களை இஸ்லாத்தில் இணைப்பதைத்தவிர
வேறு வழியில்லை என்பதை ஒட்டுமொத்த கிருஸ்தவர்களும் விரைவில்
விளங்கிக் கொள்வார்கள், அந்த நாள் வெகு தொலைவில் இல்லை இன்ஷா
அல்லாஹ்.
|